பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

கூறுகின்றனர். தாருகன் உரம் கிழித்த தறுகண்மையும், எருமை வடிவில் வந்த அவுணனை வென்று சிறந்த வீறுடைமையும் அவள் செய்தியில் விளக்கம் பெறுகின்றன. வருணனாகிய நெய்தல் நிலத் தெய்வத்தைப் பற்றி ஒரு செய்தியும் பழந்தமிழ் நூல்களில் எவராலும் எவ்விடத்தும் கூறப்படவில்லை. இச்செய்திகளை விழாக் காலங்களில் மக்கட்குக் காவியங் கூறியும் ஒவியம் காட்டியும் இரைப்போர் இருந்திருக்கின்றனர். இதனை,

'இந்திரன் பூசை இவள் அக லிகைஇவன்,
சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு
ஒன்றியபடி இதுஎன்று உரைசெய் வோரும்’

உளர் எனப் பரிபாடல் பகர்வது காண்க.

இத்தெய்வங்கட்கெல்லாம் மேலாம் உலகு உயிர்களின் வேறாய் ஒன்றாய் உடனாய் நிலவும் கடவுள் நிலையில் சிவபுரம் பொருளை வைத்து அவன் வடிவத்தை,

'பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணிமிடற்று ஒருவன்’

என்றும்,

'பேரிசை நவிரம்மேளய் உறையும்
காரியுண்டிக் கடவுள்'

என்றும் கூறுவர். அவன் முப்புரம் எரித்த வரலாற்றை,

"ஓங்குமலைப்பெருவில் பாம்புஞாண் கொளீஇ
ஒருகனை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற் றண்ணல்’

என்றும்,