பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

"தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக
அடங்காதார் மிடல்சாய அமரர்வந் திரத்தலின்
மடங்கல்போற் சினை இ மாயம் செய அவுணரைக்
கடந்தடு முன்பொடு முக்கண்ணால் மூவெயிலும்
உடன்றான்”

என்றும்

"உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வன்”

என்றும் பழந்தமிழர் தம்முட் பாராட்டிப் பரவி வந்துள்ளனர்.

பழந்தமிழர் சமய வாழ்வில் கார்த்திகை விளக்கீடும், மார்கழித் தைந் நீராட்டும் பங்குனி உள்ளி விழாவும் சித்திரை இந்திர விழாவும், வேனில் விழாவும் பிறவும் சிறந்து விளங்கின. கார்த்திகை விளக்கீட்டு விழா இன்றைய தீபாவளியும் பொங்கற் புதுநாள் விழாவும் ஆகிய இரண்டின் சிறப்புக்களை ஒருங்கே தன்கண் கொண்டிருந்தது. இதனை,

“மழைகால் நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர் மதிநிறைந்து
அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகதில் அம்ம"

என்றும், இக்காலத்தே புதுமணமகளிர் புதுநெல் கொண்டு அவலிடித்துப் பாற்பொங்கல் இட்டு மகிழும் திறத்தை, இதே பாட்டில்,