பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

எனவே, இங்கொன்றும் அங்கொன்றுமாக வீட்டு வாழ்க்கையிலும், நாட்டு வாழ்க்கையிலும் விளங்கிய தமிழக மகளிரின் தன்மைகளைக் காண்போம்.

வீட்டு வாழ்க்கை

மனையுறை மகளிர், உயிரென விளங்கிய தம் கணவரைப் பேணியும், பெண்ணின் பெருமையாய தம் திண்ணிய கற்பினைக் காத்தும், மயக்குறுமக்களை மாண்புற வளர்த்தும், வருந்திவரும் விருந்தினரை யோம்யியும், இடும்பைபெனக் கருதாது குடும்பச் சுற்றத்தைத் தழுவியும், கடவுளை வணங்கியும், கவின் கலை வளர்த்தும் துன்பந்துடைத்து இன்பம் பெருக்கினர்.

கணவனைப் பேணல்: கணவன் மனைவி என்ற இருவரின் தொடர்பைப் பல்வகை உவமைகளாற் கூறுவர் புலவர்.

உடம்பொடு உயிரிடை யென்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு" {{float_right|- குறள் 1122

என்றுரைப்பர் வள்ளுவர். இதையே-கணவனின் இன்றியமை யாமையை-மற்றோர் உவமையால் நற்றினை குறிக்கும்,

“நீரின் றமையா வுலகம் போலத்
தம்மின் றமையா நந்நயந் தருளி"

என்று தலைவியின் கூற்றில் திகழும் கருத்து, கணவனையிழந்த மனைவியின் வாழ்க்கை வறண்டு விடுவதையும் விளக்குகிறது.

“கணவனை யிழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று
இணையடி தொழுதுவீழ்ந் தனகோ மடமொழி"

என்ற சிலப்பதிகார அடிகளால், செல்வங் கொழிக்கும் அரசியின் வாழ்வும், கணவனிறக்க வறண்டு விடுவதை அறியலாம்.