பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95

இல்லை. இவ்வளவு பெரிய மருத்துவமனைகளும் அக்காலத்தில் இல்லை. எத்தனை ஆஸ்பத்திரிகள் கட்டினாலும் இப்போது நோயாளிகளுக்கு இடம் போதவில்லை என்கிறார்கள். இதற்கு, நாள்தோறும் மக்களுக்கு நோய் அதிகப்படுவதே காரணமாகும். நோய்க்கு மருந்து தருவதைவிட, நோய் வராமல் தடுப்பதே அறிவுடைமை. நிலத்தியல்புக்குத் தக்க மருத்துவ முறைகளும் மருந்துகளும் சமயச் சார்பு கலந்த சுகாதார முறைகளும் இப்போது அழிந்துவிட்டன. மக்கள் தண்ணீர் குடிப்பதையே மறந்துவிட்டனர். நாவரண்டால் காபி, டி, சோடா, கலர், கிரஷ்தான் குடிக்கிறார்கள். 'சிகரெட்டு’, பீடி, சிற்றுண்டிகள் அதிகப்பட்டுவிட்டன.

மேற்கே கதிரவன் மறையும்போது கதிரவனைப் பார்த்துப் பத்து நிமிஷமாவது மூச்சுப் பயிற்சி செய்து தொழவேண்டிய நேரத்தில், உணவு உட்கொள்ளக் கூடாத நேரத்தில் சிற்றுண்டிக் கடைகளுக்குச் சென்று கண்டதைத் தின்று, காபி குடித்துச் 'சிகரெட்டு' பீடியோடு வேடிக்கை விநோதங்களுக்குச் செல்லுகின்ற இக்கால மக்களுக்கு டி.பி. எனும் கூடிய இருமலும் புற்று நோயும் வயிற்றுநோயும் வராமல் விடுமா? இதைக் கல்லூரி மாணவர்கட்கு ஆசிரியர்கள் எடுத்துக் கூறுவதில்லை. இவற்றிற்கெல்லாம் காரணம் நமது தாய் மொழியின் வழியாக நீதி நூல்களையும், நோயனுகா விதிகளையும் சிறிதும் கற்காமல் கை விட்டதே காரணமாகும்.

சங்க இலக்கியங்களில் பதினெண்கீழ்க் கணக்கில் திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம் போன்ற நீதி நூல்களுக்கும் மருந்துப் பெயர்களை வைத்திருக்கின்றார்கள். திருக்குறள் பொருட்பாலில் மருந்தென்னும் குறிப்புள்ளது. சங்கப் புலவர்கள்