162 கல்ல கிளர்ச்சி எனவே, பிள்ளைகள் தின் பண்டம் செய்துகொடுக்க வில்லையென்றும், உயர்ந்த ஆடையணிகலன் முதலியன வாங்கியளிக்கவில்லை யென்றும் பெற்ருே.ரிடம் போராட லாகாது. பெற்ருேர், தம்மை மேலும் மேலும் படிக்க வைக்கவில்லையே என்ற அளவிலேயே பிள்ளைகளின் கிளர்ச்சி இருக்க வேண்டும். ஏனேய பிள்ளைகளின் ஆடை யணி முதலியவற்றைக் கண்டு ஏங்கவும்கூடாது. பொருமை எய்தவும் கூடாது. அவர்களின் கல்வியைக் கண்டே ஏங்கிப் பொருமை எய்தல் வேண்டும். ஆல்ை, அப் பொருமையினே அப்பிள்ளைகளைக் கெடுப்பதற்குப் பயன் படுத்தலாகாது, தம் கல்வியை வளர்த்துக்கொள்ளும் அள வுக்கே பயன் படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகைய கிளர்ச்சியுடன் கற்றுணரும் பிள் அளகளே பிள்ளைகளாகக் கருதப் பெறுவார்கள். இக் கிளர்ச்சியில்லாப் பிள்களகளோ,
- பிள்ளே பிறந்தும் விளக்கமில்லே' எனப் பலராலும் குறை கூறி எள்ளி இகழப்படுவார்கள். ஆதலின், பிள்ளைகள் ஆற்றவேண்டுவன யாவை என கோக்குவோம்.
கல்வி சிறந்த தமிழ்நாடு எதிர்கால உலகியலே ஏற்று கடாத்தும் பொறுப்பு வாய்ந்த இளைஞர்களே ! - - துக்தம் கடமைகளே உணர்வீர்களாக ! நாட்டின் முன்னேற்றம் தும் கைகளில்தான் உள்ளது. காலம் மாறும் த்ன்மையது. இனியும் உறக்கம் வேண்டாம். விழிப்பு எய்துiராக ஆரவார ஆடை அணி அணிதல், ஓயாமல் காடகம் பார்த்தல், புகைபிடித்தல் முதலியவற்றில் பொழுதைப் போக்கி, துங்தம் இளமையைப் பாழாக்கி 168 விடாதீர்கள் நாட்டிற்கு நன்மை கிடைக்கும் அளவில் ஏன் உலகிற்கே உதவும் அளவில் பலதுறைக் கல்வியினையும் கற்று, உணர்ந்து தேர்ச்சி பெறுவீராக பெற்று, கல்வி சிறந்த தமிழ்நாடு' என்னும் கவி சுப்பிரமணிய பாரதியார் வாக்குக்கு மேன்மேலும் அரண் செய்வீராக 1 மக்கள் விளக்காம் உணர்ச்சிக் கல்வி ஓங்கி உயர்க !