பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 பதை உணர்ந்தான். உடனே பழையன் பிறந்த போரூரை அவன் உடைமையாக்கி, அவனேத் தன் படைத் தஃலவனுக்கிக் கொண்டான். பழையன் படைத் தலைமை ஏற்ற மறுகணமே கொங்கரை அடக்கும் முயற்சியில் அரசன் கருத்துச் சென்றது. உடனே ஒரு பெரிய யானேப் படையைப் பழையன் பால் ஒப்படைத்துக் கொங்கரை வென்று வரப் பணித் தான். பழையன் தலைமையில் சோணுட் டுப் பெரும்படை புறப்பட்டு விட்டது என்பதை அறிந்துகொண்ட கொங்கர், அச்சோழனின் பகை வணுகிய சேரன் துணை நாடினர். கொங்கர் ஒருவகை யில் தன்ைேடு இனத்தொடர்பும் உடை யராதல் அறிந்த சேரன், அவர்க்குத் துணை புரிய முன்வந்தான். சேரமான் கணக்கால் இரும்பொறை என்ற அம்மன்னன் தன் படைத் தலைவர்களாகிய கன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை என்பவர்களோடும், தன் பெரிய யானைப் படை யோடும் கொங்கர்க்குத் துணை தரப் புறப்பட்டான். ஆறு படைத் தலைவர்களேக்கொண்ட பெரிய படையைப் பேரரசன் ஒருவன் தானே முன்னின்று கடத்திக் கொண்டு கொங்கர்க்குத் துணேபுரியப் புறப் பட்டு விட்டான் என்பதை அறிந்தும், பழையன் பேராண்மையில்கொண்ட கம்பிக்கையால், செங்களுன் அவன் ஒருவனே மட்டுமே செருமுகம் நோக்கிச் செல்ல விட்டான். பழையன் தனி ஒருவனுக வருகிருன் என்பதை அறிந்தும், அவன் பேராண்மையில் கொண்ட அச்சத்தின் மிகுதியால், அவனை எதிர்த்துச் சென்று, இடைவழியிலேயே மடக்கிப் போரிட்டு அழித்தொழிக்கக் கருதாது, தம் காட்டகத்தே உள்ள, அரண் மிக்க கழுமலக் கோட்டைக்குள் புகுந்து ஒளிந்துகொண்டனர் கொங்கரும், அவர்க்குத் துனே புரிய வந்த கணேயனும், அவன் படைத் தலைவரும்.