பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 தன் போர்ப் பயிற்சியில் கொண்ட தளரா நம்பிக்கை யால், சேணெடும் வழிகளைக் கடந்து செல்ல வேண்டுமே, பகைவன் நாட்டில் சென்று போரிட வேண்டும், பகைவர் படைத் தலைவர் பலரைத், தான் ஒருவகைவே கின்று போரிடவேண்டுமே என எண்ணிச் சிறிதும் கலங்காது வந்து, பழையன், கழுமலக் கோட்டையை வளைத்துக் கொண்டான். கழுமலக் கோட்டை கணப்பொழுதில் தகர்ந்தது. பழையன் கொண்டுசென்ற களிற்றுப்படை, காவல் மிக்க் அக்கோட்டையைத் தாக்கித் துள்ளாக்கிற்று. அரண் பாழ் பட்டுப் போகவே, அடங்கியிருந்த கொங்குப் படையும், அக்கொங்கர் படைக்குத் தலைமை தாங்கி நின்ற ஆறு படைத் தலைவர்களும் புறம்வந்து போரிடத் தொடங்கினர். பழையன் ஆண்மைக்கும் ஆற்றலுக்கும் அரிய வாய்ப்புக் கிட்டிற்று. வில் லாண்மை காட்டிப் போரிட்டான் சிறிது நேரம். வாளும் கேடகமும் கொண்டு களம் புகுந்து கணக் கற்ருேரை வெட்டி வீழ்த்தினன். இறுதியில் வேல் கொண்டு வெஞ்சமர் புரிந்தான். அவ்வளவே, ஆறு படைத் தலைவர்களும் ஒருவர்பீன் ஒருவராக மாண்டு மறைந்தனர். கழுமலப் போர்க்களம் எங்கும் பின மலைகளே காட்சி அளித்தன. உடைந்த தேர் உருளே களும், முறிந்த வெண்கொற்றக் குடைகளும், கிழிந்த முரசுகளும் களம் எங்கும் சிதறிக் கிடத்தன. கழுமலப் போர்க்களம் காணக் கண்கூசும் கொடு மையதாயிற்று. கார்காலத்துப் பெருமழை பெய்ய, குளத்தின் பெரிய கரையின் கீழே உள்ள மதகின் வழி யாகச் செவ்வெள்ளம் பாய்ங்தோடுவதுபோல், இறந்து வீழ்ந்த யானே ஒன்றின் கீழே அகப்பட்டுக்கொண்டே, தோல் கிழிந்துபோன முரசின் ஊடே, இரத்த .ெ வள்ள ம் பாய்ந்தோடிக்கொண்டிருந்தது ஒரு பக்கத்தில். - - .