பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 கழுமலக்களத்தை இவ்வாறு பிணக்களமாக்கிக் கடும் போர் புரிந்துகொண்டிருந்தான் பழையன். தன் படைத் தலைவர் அறுவரும் இறந்துபோயினர் என்ற செய்தி கணேயனேக் கலங்க வைத்துவிட்டது. தன் பகைவனின் படைத்தலைவன் ஒருவன், தனித்து வந்து, தன்னுட்டுள் புகுந்து, தன் கோட்டையை அழித்து, படைத் தலைவர் அத்தனே பேரையும் கொன்று வெற்றி கொள்வதா? அவனே இனியும் உயி ரோடு உலாவ விட்டுவைப்பதா? விட்டு வைத்தால் தன் பேரரசின் பெருமைக்குக் கேடல்லவோ என்று எண்ணிப், பழையனே எவ்வாறேனும் கொன்று உயிர் போக்குதல் வேண்டும் எனத் துணிந்து களம்புகுங் தான் கணையன். பேரரசனே களம் புகுந்துவிட்டான் என்ற நினைப் பால், கொங்கரும் சேரரும் ஊக்கம்மிகுந்து உரங் கொண்டு போரிட்டனர். போர் தொடங்கியது முதல் தனியொருவனுகவே கின்று போர் புரிந்து தளர்ந் திருக்கும் கிலேயில், பகைவர் புதிய ஊக்கத்தோடு மேல் வங்து தாக்கியதைப் பழையல்ை தாங்குதல் இயலா தாயிற்று. கணேயன் கணே பட்டுக் களத்தில் வீழ்ந்து மாண்டுபோனுன் அம்மாவீரன். : செய்தி கேட்டான் செங்களுன். கழுமலக் கோட்டை தகர்ந்து போயிற்று, கொங்கர் படை அழிவுற்றது, அவர்க்குத் துனே வந்த சேரன் படைத் தலைவர் அறுவரும் உயிர் இழந்தனர்,கழுமலக்களத்தில் வெற்றி கண்டுவிட்டது கொற்றம்மிக்க சோழர்படை, சோழர் படைப் பெருமையை உலகறியக் காட்டிவிட் டான் பழையன் என அடுத்தடுத்து வந்த செய்திகளால் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியிருந்த செங்களுன், பழையன் இறந்துபோனன் என இறுதியில் வந்த செய்தி கேட்டுச் சிறிதுபோழுது செயல் இழந்து போனன். இயல்பாகவே சிவந்திருக்கும் அவன்