பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. காவிரிக்குக் கரையும் அணையும் அமைத்துக் காவிரி ைேரப் பயன்கொண்டு சோணுட்டு மண்ணே வளம் கண்டு, வளவன் எனும் புகழ்மிகு பெயர் பூண்ட கரிகாலன் மகள் ஆதிமந்தி யின் ஆருயிர்க் கணவனகிய ஆட்டனத்தி எனும் சேர காட்டு இளவரசன், புனலாட்டு விழாவில் தான் பெற்றிருந்த பயிற்சிகளைச் சோணுட்டு மக்களும் மன்ன்னும் கண்டு க்ளிக்கும்படி ஆடிக் காட்டி, இறுதி யில் ஆற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட இடம் அக்கழார்த் துறையே. கழார் நகர், காவிரிக் கரையில் அமைந்திருந்தமை யால் நீர்வளம் குறையா கன்செய்களே நிறையப் பெற்றிருந்தது. அங்ககரைச் சூழ உள்ள ர்ேகிலேகளில், செங்தழல் நிகர்க்கும் செந்தாமரை மலர்கள் மலர்ந்து மணம் வீசும். தாமரைக் கொடிக்கு இடையிடையே, உள்ளே துணே பொருங்திய வள்ளேயின் மெல்லிய கொடிகளும் பின்னிக் கிடக்கும். அக்கொடிகளையும் அறுத்துக்கொண்டு விரைந்தோடும் வாளே மீன்களைப் பிடித்துத் தின்னும் நீர் காய்கள், கரைக்கண் வளர்ங் திருக்கும் பிரப்பங்கொடிப் புதர்களில் புகுந்து உறங்கும். அத்துணே கிலர்ேவளம் மிக்கது அம் மாநகர். - . . - வளம்மிக்க ஊரில் வாழப் பெற்றமையால், அவ்வூர் மக்கள் விழுமிய வாழ்க்கை நெறியுடைய வராய் விளங்கினர். கடவுளரை வழிபட்டுக் காக்கைக் குப் பலிச் சோறிட்டு, வருவிருந்தோம்பும் விழுமிய வாழ்வினராய் வாழ்ந்தனர். அழகிய இனிய பாக்களே இயற்றி அளிக்கவல்ல பெண்பாற் புலவர்களேப் பெற்றுத் தருமளவு, அவ்வூர் வாழ்மக்கள் நிறை யக் கற்று நீள்புகழ் பெற்றுத் திகழ்ந்தனர். கழார்க் கீரன் எயிற்றியார் எனும் பெயர் பூண்ட அப் பெண்பாற் பெரும் புலவர் பாடிய