பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

தலைவன் ஒருவன் தேவை என்பதை உணர்ந்து, அத்தகு போர்வீரர்கள், அனைத்து வகையாலும் தகுதியுடையான் ஒருவனைத் தேர்ந்து, அவனே அப்படைக்குத் தலைவனுக்கிப் பயன்கொண்டார்கள் பண்டைத் தமிழ்ப் பேரரசர்கள். படையின் பண்பும் பயனும் கூறும் அதிகாரத்தின் ஈற்றுக் குறளாக, 'நிலை மக்கள் சாலஉடைத்து எனினும், தானை தலை மக்கள் இல்வழி இல்' என்ற திருக்குறளே, வள்ளுவர் வைத்து அமைத்திருக்கும் திறத்தினை உள்ளுவோமாக

களம் புகுந்து போரிடும் காற்படையினும், அந்நாற் படையைக் காலமும் இடமும் அறிந்து களம் புகுத்தும் படைத் தலைவன் திறமே வெற்றி தோல்வி கட்குக் காரணமாம் ஆதலின், படைத்தலைவர் தேர்வில், படைவீரர் தேர்வில் காட்டும் விழிப்புணர்ச்சியினும் பன்மடங்கு மிக்க விழிப்புணர்ச்சி மேற்கொண்டு வந்தனர். கிற்க.

நாடாள்வார் நல்லவரா யிருந்துவிடுவதினா லேயே நாட்டில் நல்வாழ்வு குடிகொண்டுவிடாது. அந்நாட்டிற்குப் பகைவரால் நேரும் கேடு வரா வண்ணம் அந்நாட்டின் நான்கெல்லைகளையும் காக்க வல்ல ஆற்றலும் அந்நாடாள்வார்பால் அமைதல் வேண்டும். கோலுடையார்பால் கொற்றமும் குடி கொள்ளுதல் வேண்டும். அதுவும் அமைந்தால்தான் நல்லரசின் பயனை நாட்டவர் நுகர்தல் கூடும். இந் நாட்டம் உடையவராகி நாடாள்வார் அமைக்கும் நாற்படை, நாட்டெல்லைகளைக் காத்து நாட்டில் அமைதி வாழ்வை நிலைநாட்ட நினையாது அந்நாட்டின் அரசையே நிலைகுலையச் செய்து நாட்டின் அமைதி வாழ்வை அழித்து அலைக்கழிக்கத் தொடங்கி விடுமாயின், அதைத் தடுப்பது அரிதாகிவிடும் உலகின் அமைதிக்கும் ஆக்கத்திற்கும் பணிபுரியும் பெரு நோக்கும் பெரும் பொறுப்பும் உடையதாகுக என,