பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 தகாது. தக்க துணைபெற்றே போதல் வேண்டும் என உணர்ந்து, திதியன் எழனி, எருமையூரன், இளங்கோ வேண்மான், பொருகன் என்ற குறுநில மன்னர் ஐவர் துணேயை நாடினர். அவர்களும் இதற்கு இசைங்தனர். அவர்கள் துணைவர, அரசர் இருவரும் பாண்டிநாடு புகுந்து, அப்பேரரசின் தலைநகராம் கூடன் மாநகரை வளைத்துக் கொண்டனர். அது கேட்டான் நெடுஞ்செழியன். 'தம் படைப் பெருமையால் என் ஆண்டிளமையை எள்ளிப் போருக் கெழுங்த இவரை வென்று, இவர்தம் வெற்றி முரசுகளேயும், வெண்கொற்றக் குடைகளையும் கைப் பற்றுவேன். அதில் தவறி விழுவேனயின், கொடியன் எம் இறை என என் குடிகள் என்னேக் குறைகூறிப் பழிப்பாராக! புலவர்கள் என்னேயும் என் காட்டையும் பாடிப் பாராட்டுவதைக் கைவிடுவாராக! வறுமைகறி வருவார் தம் வருத்தத்தைக் களையமாட்டா வறுமை என்னே வந்து அடையுமாக!' என வஞ்சினம் கூறி வெகுண்டான். வேந்தன் வெகுளியின் வேகத்தைக் கண்டான் பழையன். அக்கணமே கோசர்படை அவன் தலைமை யில் போர்க்களம் புகுந்தது. கோசர் படையைக் கண் டான் கிள்ளிவளவன். கோசர்களின் கொற்றத்தை அவன் முன்னரே அறிந்திருந்தான். அப்படையை வென்று அழித்தால் அல்லது, பாண்டிகாட்டு ஆட்சி பால் தாம்கொண்ட வேட்கை நிறைவேருது என்பதை நன்கு உணர்ந்தான். அதனல், உடன் வங்தோர், பாண்டி நாட்டுப் படையின் பிற அணிகளை வளைத்துப் போரிடவும், கிள்ளிவளவன் கோசர் படையை வளைத் துக் கொண்டான். வெள்ளம் போல் பாய்ந்து வங் தது கிள்ளிவளவன் படை. அவன் குதிரைப்படை காற்றென விரைந்து கடும் போரிட்டது. அவன் களிற்றுப் படை விளேத்த கேடுகளும் குறைவில்லை.