பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 பார்த்தான் பழையன். வாள் ஏந்திக்களம் புகுந்தான். அவ்வளவே. கிள்ளிவளவன் கல்லமர் கெட்டது. அவன் குதிரைப் படை வென்று கைப்பெற்றப் பட்டது. அவன் களிற்றுப் படையில் கணக்கிலாதன கோசர் உடைமை ஆனது. கிள்ளிவளவன் புறமுதுகிட்டான். புறங்காட்டி ஒடும் வளவனைப் பழையன் விட்டா னல்லன். பெரும்படை தொடர்ந்துவர, அவனைத் துரத்திச் சென்ருன். பாண்டி நாட்டு எல்லேயையும். தாண்டிவிட்டான் சோழன். படைத்தலைவன் பழை யன் அங்கிலேயிலும் அவனே விட்டிலன். சோழர் தலைநகர் தஞ்சை மாநகர்க்கு அண்மையில் உள்ள தலையாலங்கானம் வரை விடாது துரத்திச் சென்ருன். இறுதியாக ஆங்கு அவனே வளைத்து அரும்போர் ஆற்றி, சோழர் படையை அறவே அழித்து, தன் வேங்தன் வஞ்சினம் வாய்க்கும் வண்ணம், வளவன் வெற்றி முரசையும், வெண்கொற்றக் கொடையையும் கைப் பற்றிக் கொண்டான். வென்று கைக்கொண்ட சோணுட்டில், தன் பாண்டி நாட்டு மீன் கொடியைப் பறக்கவிட்டான். கிள்ளிவளவன் பகைவனுகிய கோக் கோதை மார்பன் என்பான் கண்டு நகைக்கும்படி வென்ற அவ்வெற்றிச் சிறப்போடு பழையன் பாண்டி நாடு திரும்பினன். இழையணியானைப் பழையன் மாறன் மாடமலி மறுகின் கூடல் ஆங்கண் வெள்ளத் தானேயொடு வேறுபுலத்து இறுத்த கிள்ளிவளவன் நல்அமர் சாஅய்க் கடும்பரிப் புரவியொடு களிறுபல வவ்வி ஏதில் மன்னர் ஊர்கொளக் கோதை மார்பன் உவகையிற் பெரிதே." சோனட்டுத் தலையாலங்கானத்தில் தன் படைத் தலைவன் பெற்ற வெற்றியின் பெருமை கண்டு பாண்டி