பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 காட்டு மக்கள், "தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்” எனப் பெயரிட்டு அழைத்துத தன்னைப் பாராட்டிலுைம், அவ்வெற்றிப் புகழ அனைத்தும் படைத்தல்வன் பழையனுக்கே உரித்து என உணர்ந்தான் செழியன். உண்ர்ந்ததோடு நில்லா மல், அதற்கேற்ற சிறப்பை அவனுக்கு அளிக்கவும் துணிந்தான். மேலும், இன்று தோற்ருேடிய பகை வர், என்னும் சிலகாலம் கழித்து மீண்டும் படை யெடுத்து வருவதும் இயலும். அப்போது அவர்களத் தன் தலைநகர் வாயில்வரை வருமாறு விடுதல் போர் முறையாகாது. அவர்களே எல்லப்புறத்திலேயே தடுத் துத் துரத்தி விடுதல் வேண்டும். அதைச் செய்து முடிக்க வேண்டுமாயின், நாட்டு எல்லையில் ஒரு பெரிய படையை நிறுத்தி வைக்கவேண்டும் என்றும் உணர்ந் தான் நெடுஞ்செழியன். உணர்ந்தவன், தன் இரு பெரும் வேட்கையும் ஒருங்கே நிறைவேற்றத்தக்க ஓர் அரிய செயலேத் செய்து முடித்தான். சோணுட்டில் சோழர் பேரரசிற்குக் கேடு .கிகழும்போதெல்லாம் சோழர்க்குப் படைத்துணை அளித்துக் காக்கும் மலேயமான்களின் அரசிருக்கை யாகிய திருக்கோவலூருக்கு அண்மையில், கள்ளக் குறிச்சி மலையடிவாரத்தில் இருந்தமோகூரைப் பழைய னுக்கு உரிமையாக்கி, அம்மாநகர்க்கு அவனே மன்ன னக்கி, 'மாறன்’ என்ற தன் குடிப் பெயரையும், அவனுக்குச் சூட்டி அவனேச் சிறப்பித்தான். பழைய னுக்குத் துணேயாக, அவன் கீழ்ப் பணியாற்றிய கோசர் படையை அளித்து, அப்படை வீரர்கள் வாழத் தக்க கோசர் பாடிகள் பலவற்றையும் ஏற்படுத்தி, அப்படை வீரர்களையும் சிறப்பித்தான். மலேயிடை யூராதலின், தவருது மழை பெற்றுவளம் கொழிக்கும் மோகூர்க்கு உரியய்ை, மோகூர் மன்னன் பழையன் மாறன் எனும் சிறப்புப் பெயர் பூண்டு தன் அரசவைக்