பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 கண் கோசர் படை அமர்ந்து அழகு செய்யச் செம் மாந்து வாழ்ந்திருந்தான் பழையன். ~ தமிழ் நாட்டில், தலேயாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் நாடாண்டிருந்த காலத்தில், கங்கை பாயும் வடநாட்டில் மெளரியர் என்ற சிறந்த அரச இனத்தவர் அரசோச்சி வங்தனர். தமிழ் நாட்டின் செல்வச் சிறப்பை, அவ்வடவேங்தர்கள் அறிந்திருந்தமையால், அவர்களில் பலர் தமிழ்நாட்டை வென்று அடிமைகொள்ளும் வேட்கையுடையராயினர். அவ்வேட்கை, மெளரிய இனத்தவர் உள்ளத்திலும் இடம் பெற்றது. உடனே நெடிய பெரிய தேர்களைக் கொண்ட மெளரியப் பெரும்படை யொன்று, தென்னடு நோக்கிப் புறப்பட்டது. விந்தம் கடந்து வேங்கடத்தை அடைந்த மெளரியர், தமிழகத்தின் வடவெல்லேயாக விளங்கிய அவ்வேங்கட மலையடி வாரத்தில் வடுகர் என்ற இனத்தவர் வாழ்வதைக் கண்டார்கள். அவ்வடுகர் சிறந்த வில்வீரராகவும், தமிழகத்தின் எல்லேக்கண் வாழ்ந்து, தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பினேயும், அங்காட்டு அரசியல் நிலை யினையும் அறிந்தவராகவும் விளங்குவது கண்ட மெளரியர், அவ்வடுகரைத் தம் கண்பர்களாக ஆக்கிக் கொண்டார்கள். வடவர் முயற்சிக்கு முன்னேடித் துணைபுரிய வடுகரும் முன்வந்தனர். வடுகப்படை வழிகாட்ட, வேங்கடம் கடந்து தமிழகம் புகுந்த மெளரியப் பெரும் படை, தம் தேர்ப்படை செல்ல இயலாதபடி இடை நின்று தடுத்த மலேகளேயெல்லாம் வெட்டி வழிசெய்து கொண்டு தென்திசை நோக்கி வங்து கொண்டிருந்தது. வேங்கடத்தைக் கடந்து விரைந்து வந்த மோரி யர்கள், தொண்டை நாட்டையும் தாண்டிவிட்டார் கள். அப்போது தூசிப்படையாய் வழிகாட்டிவந்த வடுகர், மோகூர் மன்னன் பழையன் மாறனின்