பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 தன் ஆருயிர் நண்பனக மதித்திருந்தான். அதனல் அவன் வெற்றியைத் தன் வெற்றியாகவும், அவன் தோல்வியைத் தன் தோல்வியாகவும், அவன் புகழைத் தன் புகழாகவும், அவனுக்கு உண்டாகும் இழிவைத் தனக்கு உண்டாகும் இழிவாகவும் மதித்து வந்தான். அறுகை இயல்பாகவே போர்வெறி பிடித்தவன். பேரரசர் கோட்டைகளைக் கைப்பற்றுவதையே கருத் தில் கொண்டவன். அவனுக்குச் செங்குட்டுவனின் சிறந்த நட்பும் கிடைக்கவே, அவன் செருக்கு அள விறந்துவிட்டது. பழையன் பேராற்றல் வாய்ந்தவன். அவன் கீழ்ப் பணிபுரியும் கோசர் படை கொற்றம் மிக்கது என்பதை மதியாமல், மோகூர்க் கோட் டையை முற்றுகையிட்டான். உழிஞைமலர் சூடி மாற்றரசர் கோட்டைகளே மண் மேடாக்கும் அறுகை, தன் மோகூர்க் கோட்டையை முற்றியுள்ளான் என்ற செய்தியறிந்து சினங்கொண்டான் பழையன். முடி யுடை மன்னர்களையும் முறியடித்துவென்ற வீரம்மிக்க தன்னைப் பகைத்துக் கொண்ட அறுகையின் அறி யாமை கண்டு எள்ளி 5கைத்தான். பழையன் வாளெடுத்துக் களம்புகக் கண்டதும், அறுகை ஆற்றல் இழந்து தோற்றுவிட்டான். பழையன் பேராண் மையைப் பாராட்டப் பைங் தமிழ் நாட்டவர்க்கு மற்று மொரு நல்வாய்ப்புக் கிடைத்தது. கிற்க, தோல்வி கண்டு துயர் உற்ருன் அறுகை. எண் ணரிலா அரண்களே அழித்த தன் ஆற்றல் மோகூர் முற்றுகையில் அழிந்தமைக்குப் பெரிதும் காணினன். பண்டையத் தன் பேராற்றல் கண்டு பாராட்டியவர் களைப் பார்க்கவும் நாணிற்று அவன் கல்உள்ளம். அதல்ை அவர்கள் கண்ணில் படாது கரங்து வாழக் கருதினன். அதற்குத் தொலே நாடு சென்று வாழ்வதே கலமாம் எனத் துணிந்தான். உடனே, தன்னை இன்னன் என அறிந்து கொள்வார் அற்ற சேணுடு ஒன்றிற்குச் சென்றுவிட்டான்.