பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 122 வழிந்தோடிய குருதி, கார்காலத்துப் பெருமழை வெள்ளமெனப் பாய்ந்து ஒடிற்று. களமெங்கும் பிண மலைகளே காட்சி அளித்தன. இறுதியில் பழைய னுக்குப் படைத்துணேவங்த பேரரசர் இருவரும்: தோற்றனர். அவ்விருவர் உடன்வந்த வேளிர்களும் புறமுதுகிட்டனர். பழையனும் களத்தில் பட்டான். தன் நண்பனே வென்று துரத்திய பழையன் பட்ட பிறகும் செங்குட்டுவன் சினம் மாறவில்லை. அதனல், வெற்றி முரசொலிக்க மேலும் விரைந்து சென்று, பழையன் பேணி வளர்த்த காவல் மாமரம் வேம்பினே வெட்டி வீழ்த்தின்ை. அங்கிலேயில், பழை யனே இழந்த அவன் ப்த்தினிப் பெண்டிர், தம் மங்கல அணிகளைக் களைந்து போக்கிவிட்டுக் களம் புகுந்து கண்ணிர் சொரிந்து புலம்பலாயினர். அவர்களைக் கண்ட செங்குட்டுவன், அவர் கிலேகண்டு இரங்குவ தற்கு மாருக, அவர்களேப் பற்றிக் கொணர்ந்து, அவர் தம் கூந்தலைக் களைந்து, திரித்துக் கயிறுகள் ஆக்கினன். வீழ்த்திய வேம்பினே, வெற்றி முரசு ஆக்குவற்கேற்ற அளவுடைய சிறுசிறு துண்டுகளாக வெட்டினன். அத்துண்டுகளே யெல்லாம் அம்மயிர்க் கற்ருல் ஒன்று பிணித்தான். பழையனுக் குரிய பட்டத்து யானேகளைக் கொண்டுவந்தான். மரப் பிணிப்பில், அவற்றை வரிசையாகப் பூட்டி, தன் சேர நாடு நோக்கி ஒட்டிச் சென்ருன். தன் பேராண்மையால், பாண்டியர் படைத் தலைமை ஏற்றுப் பாண்டிகாட்டுப் பேரரசு வாழப் பெரும்பணியாற்றியும், தமிழகத்திற்குப் புறப்பகை வரால் வர இருந்த பெருங்கேட்டைப் போக்கியும் பெற்ற பெரிய புகழோடு பெருவாழ்வு வாழ்ந்திருந்த பழையன் மாறன் இறுதியில், தமிழகத்தின் அகத்தே எழுந்த பகையால், அந்தோ அழிவுற்ருன்.