பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 'தன் நண்பன் அறுகைக்கு அடாது புரிந்தான் மோகூர்ப் பழையன் என்பதறிந்ததும், அப்பழையன், வட இந்தியப் பெருவேந்தர் மரபினராம் மெளரியரின் பெரும் படைகளே, அவர்க்குத் துணேவங்த வடுகப் பெரும் படையோடு அழித்து வெற்றிகொண்ட ஆற்றல்மிகு கோசர் படைத் தலைவனகவும், அஞ்சாது எதிர்த்து, அவனையும் கொன்று, அவன் காவல்மரமாம் வேம்பையும் வெட்டி வீழ்த்தி, வீழ்ந்த அம் மரத் துண்டங்களே, அவன் உரிமை மகளிரின் கூந்தல் மயிரால் பிணித்து ஈர்த்துக் கொணர்ந்தான் அக் கோமகன்” எனவும், 'தன்னைப் பெற்ற பெருமைக்குரியளாய நற் சோணே இறந்த பின்னர், அவள் படிமத்தைக் கங்கையில் ரோட்டக் கொண்டு சென்ற காலே, தன்னை எதிர்த்துப் போரிட்டுத் தாய்க்குத் தான் ஆற்ற வேண்டிய கடனுக்குக் கேடு புரியத் துணிந்த ஆரிய அரசர் ஆயிரவரோடும், அக் கங்கை யாற்றங் கரையில் தான் ஒருவகைவே கின்று போராடி வெற்றி கொண்டான் அவ்விழுமியோன்’ எனவும், "சோணுட்டில், தன் தாயுடன் தோன்றிய மாமன் இறந்து போகவே, அவன் குலம் தழைக்க வந்த இளையோனே சோழர் அரியணையில் அமர்வது முறையாகவும், அம் முறையோடு முரணிக் கலாம் விளேத்த அக்குலத்து அரசிளங்குமர்ரர் ஒன்பதின் மரையும் நேரிவாயிற் போரில் நிலைகுலையப் பண்ணி, அம்மான் சேயை அரியணையில் இருத்தி அகமகிழ்க் தான் அவ்வடலேறு' எனவும், 'கற்புக் கடம் பூண்ட பொற்புடைத் தெய்வ மாம் கண்ணகி தேவியாருக்குச் சிலையாகும் சிறப்பு மிகு கல் கொள்வான் வேண்டி, வடபேரிமயப் 'பெருவரை யடைந்து, தொன்மை மிகு நன்மொழி பேசும் தென்தமிழர் திறம் அறியாது, ஆணவத்தால்