பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 அறிவிழந்து அவரை இழித்துப் பேசிய ஆரிய அரசர் கனக விசயரைக், கங்கைக் கரைக்கண் போராடி வென்று, இமயத்திற் கொண்ட கல்லே அன்னர் தலே மீதே ஏற்றிக் கொணர்ந்தான் அக்கோமகன்’ எனவும் புலவர் பாராட்டும் புகழ் உரை அனைத்தையும் சேரன் செங்குட்டுவனே அடையப் பண்ணியவன் அவன் பெரும் படைத் தலைவன் வில்லவன் கோதையே. சேரன் செங்குட்டுவன் படைத் தலைவய்ைப் பணி புரிந்த வில்லவன் கோதை, செங்குட்டுவன் குலத் தினின்றும் வேறு பட்டவனல்லன். அவனும் அச் சேரர் குடியைச் சேர்ந்தவனே ஆவன். அவன் இயற் பெயராம் அத் தொகை மொழியுள் முன்மொழியாகிய வில்லவன் என்பது சேரரைக் குறிக்கும் காரணப் பெயர்கள் பலவற்றுள் ஒன்ரும் தகுதியுடைத்து. வில் உருவைத் தம் கொடியில் பொறித்தும், தம் இலாஞ்சனேயாக அமைத்தும் ஆள்பவர் என்பதே அது குறிக்கும் பொருளாம். மேதக்க பொய்கை கவி கொண்டு வில்லவனைப் பாதத் தணே விட்ட பார்த் திபனும்” என்ற விக்கிரம சோழன் உலாத் தொடரில் வரும் வில்லவன் என்ற பெயர், சேரர் குடி வந்த கணேக்கால் இரும்பொறையைக் குறிப்பது காண்க. வில்லவன் என்ற முன் மொழியைப் போலவே, கோதை என்ற பின் மொழியும் சேரரைக் குறிப்பதாம். இது குட்டுவன் கோதை கோக்கோதை மார்பன், கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை எனஅக் குலத்து வந்த காவலர்களும் பாவலர்களும் பெயரிட்டு அழைக்கப் பெறுவதால் உண்மையாதல் அறிக. . மலைவளம் காண மனைவியொடு சென்று பேரி யாற்றங்கரைக்கண் இருந்த காலே, கோவலற்குற்ற தும்,அவனுக்குக் கேடுபுரிந்த கோமகற் குற்றதும் கூறக் கேட்ட குட்டுவன், "கோமகன் மாள, தன் உயிர்