பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 ஒரு ஆகிய செருவெங்கோலம் கண்விழித்துக் கண்டது கடுங்கண் கூற்றம்; இமிழ்கடல் வேலையைத் தமிழ்நாடு ஆக்கிய இது கருதினை ஆயின் எதிர்ப்பர் முதுநீர் உலகில் முழுவதும் இல்லை; இமய மால்வரைக்கு எங்கோன் செல்வது கடவுள் எழுத ஓர் கற்கே ஆதலின் வடதிசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம் தென்தமிழ் நன்னட்டுச் செழுவில் கயல்புலி மண்தலை ஏற்ற வரைக ஈங்கு!" என. கங்கைப் பேராற்றங்கரையில் கனக விசயரை வெற்றி கொண்ட செங்குட்டுவன் போர்முடிவுற்றதும், வேதம் ஒதுவதும், வேள்வித் தி ஒம்புவதும் ஆகிய ஆன்றவிந்தடங்கிய பெரியோர்களை மட்டும் காக்கும் பெரும்பணி ஏற்ற படையாளர்க்குத் தலைவனம் தகுதியை வில்லவன் கோதைக்கே அளித்தான் என்ற செய்தியால், வில்லவன் கோதையின் போர் கெறி வழு வாப் பேராண்மை புலப்படுவது காண்க. " மறக்களம் முடித்த வாய்வாள்குட்டுவன் வடதிசை மருங்கின் மறைகாத்து ஒம்புநர் தடவுத் தீ அவியாத் தண்பெரு வாழ்க்கை காற்று தாளரைப் போற்றிக் காமின் என வில்லவன் கோதையொடு வென்று வினை முடித்த பல்வேல் தானைப் படைபல ஏவி' கனகவிசயரோடு தன் அருஞ்சிறையில் அடை பட்டுக் கிடக்கும் ஆரிய அரசர் அனைவரையும், கண்ணகிக்கு எடுக்கும் விழாக் காரணமாகச் சிறை விடுக்கச் சிங்தை கொண்ட செங்குட்டுவன், அப் பணியைச் சிறக்க முடிக்க வல்லான் வில்லவன் கோதையே எனத்தேர்ந்து, அவனே அழைத்து,