பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

மேலே கூறிய பண்புகள், எல்லா மக்களுக்கும் இயல்பாக அமைந்துவிடுவதில்லை. இவையெல்லாம் கருவிலே வாய்த்த திரு என்பார்கள். இப்பண்புகளில்,தலைமுறை தலைமுறையாக வழிவழியாக ஊறிவந்த குடியில் பிறந்தவர்களே நிலைபேறின்றி நிற்பர்."இற் பிறந்தார்கள் அல்லது இல்லை, இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு." "ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும் இழுக்கார் குடிப் பிறந்தார்." "அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர்." "வழங்குவது உள் வீழ்ந்தக் கண்ணும், பழங் குடி பண்பின் தலைப்பிரிதல் இன்று." வள்ளுவர் வழங்கிய வாய்மைகள் இவை.

பழம்பெரும் குடிவந்த பெருமை இலாதவர்பால் தந்நலம் நோக்காது பிறர்நலமே நோக்கும் உலகப் பற்றும் இராது. தந்நலமே தலைதூக்கி நிற்பதால், அந்நலம் நிறைவெய்த,எத்தகைய இழிசெயலையும் துணிந்து செய்தும் விடுவர். ஆகவே,பழம் பெரும் குடிப்பிறப்பாம் பெருமை அற்றவரைப் படைத் தலை வராகத் தேர்ந்துகொள்ளாதே, "அற்றாரைத் தேறுதல் ஓம்புக; மற்று அவர் பற்று இலர், நாணார் பழி" எனக் குறள் உணர்த்தும் அரசியல் உண்மையை உணர்ந் திருந்தமையால், பழந்தமிழ்ப் பேரரசர்கள், படைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.பிறந்த குடி,பண்பில் பிறழாப் பழங்குடிதானா என்பதை ஆராய்ந்து நோக்கி அக்குடி வந்தாரையே படைத்தலைவர்களாகப் பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்தார்கள்.

"வேந்தே!தம் படை நடுவே அகப்பட்டுக் கொண்ட நின் தந்தையை என்ற தந்தையைப்,பகைவர் நாற்புறமும் வளைத்துக்கொண்டு படைக் கலங்களை ஏவத் தொடங்கும் நிலையில்,அப்படையிடையே பாய்ந்து,அப்பகைவர் ஏவிய படைக் கலங்கள் அனைத்தையும் தன் உடலில் ஏற்றுக் கொண்டு ஆரக் கால் கோத்த குடம்போல் நின்று காட்சி அளித்துக்