பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 டிருந்தனர். அவருள் ஆற்றல் மிகுபெருவீரய்ை விளங்கிய இரண்டாம் புலிகேசி என்பான், சாளுக்கியப் பேரரசின் ஆணே, வேங்கடத்தையும் கடந்து, தென் தமிழகத்தும் சென்று உலாவர உளங்கொண்டான். அப்பேராசை பிடர்பிடித்து உங்தப் பெரும் படை யோடு தமிழகம் புகுந்து காவிரிக்கரை வரையும் சென்று பாடிகொண்ட தன்னைத்தடுப்பவர் எவரும் தமிழகத்து இலர் எனும் செருக்கால் செம்மாங்து தாயகம் திரும்பும் நிலையில் காலத்தை எதிர்நோக்கிக் காஞ்சிக் கோட்டைக்குள் காத்துக் கிடந்த பல்லவர் குலத்து மன்னர் மன்னன் மகேந்திரனின் மாபெரும் படை திடு மெனத் தாக்கித் தன்னை வெற்றி கொண்டமைக்கு, வெட்கி, அவ்வெம்பழியைத் தீர்த்துக் கொள்ளும் வேட்கையோடும், வெஞ்சினத்தோடும் அதற்காம் வாய்ப்புடைக் காலத்தை எதிர் நோக்கி வாதாபியில் புலிகேசி வீற்றிருந்த காலே, காஞ்சி அரியணையில் அமர்ந்தான் நாசிம்மவர்மன். மன்னன் மகேந்திரன் மறைவால் மக்கள் மாளாத் துயருற்றிருக்கும் காலமே, தான்கருதியதை முடித்துக் கொள்ளற்காம் காலமாம் எனக்கருதினன் சாளுக்கியப் புலிகேசி. மேலும் அரியணையில் அமர்ந்திருக்கும். நரசிம்வர்மன் கனிமிக இளையன்; போர்க்களம் புகுந் தறியாதவன்; அவல்ை சாளுக்கியப் பெரும்படையோடு: சமர்புரிவது இயலாது. ஆகவே வெற்றி எளிதில் வாய்க்கும் என்ற எண்ணம் ஒரு பால் உருவெடுக்கும் அதே கிலேயில் பல்லவர், தன்பெரும் படை ஆற்றலே. அறிந்தவர்; அடிபட்ட புலி அடங்கியிராது, இன்று இல்லையாயினும் என்றேனும் ஒரு நாள் வீறுகொண்டு வெளிப்பட்டு மீண்டும் தாக்கியே திரும் என்ற மன இயல் உணர்ந்தவர்; அதனல் வடவர் வரவை எதிர் கோக்கி வேண்டும் விழிப்புணர்ச்சியோடே இருப்பர் ஆதலின் வெற்றி எளிதில் வாய்த்து,