பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 திரை ஆற்றைக் கடந்து வேங்கடமலைக்கு இப்பாலும் வந்து விட்டான். பரஞ்சோதியார் அப்போதும் போர்க்கொடி உயர்த்தினரல்லர். சாளுக்கியப் படை தொண்டை காட்டுத் தலைநகரை அணுகி விட்டது: அப்போதும் அவர் போர் தொடுத்துப் புறப்பட்டார். அல்லர். பல்லவப் படைத்தளபதி பரஞ்சோதியாரின் இப்போக்கு பல்லவ நாட்டவர்க்கு மட்டும் அல்லாமல் பகைவர்க்கும் புதுமையாகப் புலப்பட்டது.பரஞ்சோதி யாரின் போர் முறைகளைப் புரிந்து கொள்ள மாட்டாத புலிகேசி பல்லவர், இம்முறையும் பழைய போர் முறைகளேயே நம்பியுள்ளனர்; ஆகவே படையொடு புகும்போது தன்னே எதிர்த்துப் போரிடார்; வென்று மீளும்போதே பின்வந்து தாக்குவர் என்று எண்ணி விட்டான். ஆகவே தானும் தன் படையும் இப்போது அத்துணை விழிப்புணர்ச்சி மேற்கொள்ள வேண்டு வதில்லை; அதை இப்போது மேற்கொண்டால் இப்போது தளர்ச்சி நேரும் என்ற கருத்துடையணுகிக் காஞ்சிக் கோட்டைக் காவலன் குறித்துச் சிறிதும் கவலை கொள்ளாது வந்துகொண்டிருந்தான். தன் போர்த் திட்டத்தைப் புரிந்து கொள்ளத் தவறி விட்டான் புலிகேசி என்பதையும், சாளுக்கியப் படைக்கு இனி துணேப்படை கிடைப்பது இயலாது; வென்று துரத்தில்ை இருந்து இளேப்பாற இடமும், உண்டு பசியாற உணவும் கிடையா என்பதையும் உணர்ந்து கொண்டார் பரஞ்சோதியார். அவ்வளவே, பல்லவப் பெரும்படை, காஞ்சிக் கோட்டையைத் திறந்து கொண்டு வெளிப்பட்டு, விரைந்து சென்று, சாளுக்கியரை வளைத்துக் கொண்டது. காஞ்சி மாங்கர்க்குப் பத்து அல்லது பதினேந்து கல் தொலை வில் உள்ள தானகுரமாரம் எனும் ஊர் வரையும் வந்து விட்ட கிலேயிலும் வெளிப்படாத பல்லவப் படை, இனி வெளிப்படாது என்ற எண்ணத்தால் ஏமாற்றப் பட்ட கிலேயில், பல்லவர் எதிர்பாராது.