பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

களத்தில் தான் வீழ்ந்து, நுந்தை தந்தையைக் காத்தவன், இதோ நிற்கும் இவ் வீரனைப் பெற்றவனைப் பெற்ற பெரியோனாவன்.அம் மறவன் மரபில் வந்தவன் ஆதலின்,இவனும் மேகம் சொரியும் மழைத் தாரைகளையெல்லாம் இடையில் கிடந்து தான்தாங்கிக் கொண்டு நம்மைக் காக்கும் ஓலைக் குடைபோல், உன்னைக் குறித்து எய்யும் ஒவ்வொரு வேலையும் தன் உடலில் ஏற்றுக்கொண்டு நின்னைத் தாங்குவன். ஆகவே, இவனை நின் படை மறவனாக மேற்கொள்வாயாக" என அருந்தமிழ் மூதாட்டியாம் ஔவையார். அரசன் ஒருவனுக்கு உரைக்கும் அறவுரையிலும்,

இவற்கு ஈத்து உண்மதி கள்ளே; சினப்போர்
இளக்களிற்று யானை இயல்தேர்க் குருசில்!
நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை
எடுத்துஎறி ஞாட்பின் இமையான், தச்சன்
அடுத்துஎறி குறட்டின் நின்று மாய்ந்தனனே.
மறப்புகழ் நிறைந்த மைந்தினோள் இவனும்.
உறைப்புழிஓலை போல,
மறைக்குவன் பெரும! நிற் குறித்துவரு வேலே.

தன்நாட்டு ஆக்களையும் ஆனேறுகளையும் கவர்ந்து சென்ற பகைவர்களை வென்று அழித்து, அவ்வானிரை களை மீட்டுவர நாட்டு எல்லைக்கண் சின்னாட்களாக நிகழும் போரில்,இரு நாட்களுக்கு முந்திப் பங்கு கொண்ட தந்தை பகைவர்களின் யானைப்படைகளை அறவே அழித்து, இறுதியில் அக்களத்திலேயே மாண்டு போனானாகவும், நேற்று தன் கணவன் களம் புகுந்து போராடி உயிரிழந்து போனானாகவும், அன்றும் போர்ப்பறை கேட்டாளாகத், தன் குலம் விளங்க உள்ளவன் ஒருவன் தானே என எண்ணாமல், எண்ணெய் பூசித் தலை முடியவும், ஆடை தேடி அணியவும் அறியா இளையோனாகிய தன் ஒரே மகனுக்குப் போர்க்