பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 புரிய வல்ல பெரும் படையோடு சென்று, வெற்றி கண்டு, அங்காட்டு வெங்களிறுகளை வரிசை வரிசை யாகக் கைக்கொண்டு வருக!” என வாழ்த்தி விடை கொடுத்தான். அவ்வளவே, அடுத்தகணமே, போர் முரசு முழங்கச் சோழர் பெரும் படைக்குத் தலைமை தாங்கி வடநாடு நோக்கிப் புறப்பட்டு விட்டான் கருணு. கரத் தொண்டைமான். புதிய காட்டில், போகும் வழி யறிந்து போதற்குத் துணேபுரியும் பகற் போதில் விரைந்து கடந்தும், இராப்போதில் இருந்து களே தீர்க் தும் சென்ற சோழர் சேனே,பாலாறு,குசைத்தலையாறு, பொன்முகியாறு, கொல்லியாறு, வடபெண்ணேயாறு, மண்ணுறு, குன்றியாறு; கிருஷ்ணேப் பேராறு, கோதா வரியாறு, பம்பையாறு, கோதமையாறு, கோடிபலி யாறு என்ற சிற்ருறுகளேயும் பேராறுகளையும் முறையே கடந்து கலிங்கம் புகுந்தது. சோழர் படை கலிங்கம் புக்கதும், கலிங்கர்கோன் அனந்தவர்மனை அமரில் வெற்றி கொள்வதற்கு முன்னர், கலிங்க காட்டு மக்கள் உள்ளத்தில் கலக் கத்தை எழுப்புவது இன்றியமையாதது; அது வெற் றியைப் பெரிதும் எளிதாக்கிவிடும் என்ற போர் துணுக்கம் உணர்ந்த தளபதி வண்டையர்கோ, வழி யிடை ஊர்களைக் கொள்ளையிடவும், கொள்ளி வைக்க வும் பணித்தான்; சோழர் படை வீரர், தளபதியின் கட்டளையைத் தட்டாது செய்து முடித்தனர். அவ் வளவே, கலிங்க காட்டு மக்கள் நிலைகுலைந்து, உடல் பதற, உடை நெகிழ ஓடி, அனந்தவர்மன் அடி பணிந்து, அரசே! சோழர் பேரரசிற்குத் தர வேண்டிய திறையைத் தர மறுப்பது தகாது எனக் கூறிய எம் சொற்களை அன்று கேட்டிலே; அதனல் சினங்கொண்ட சோழர் படை இன்று நம் கலிங்கத் தில் காலூன்றிக் கொண்டது. அதன் வரவால் மதில்கள் இடிகின்றன; பதிகள் எரிகின்றன: எங்கும் புகை மண்டுகிறது; மலர்ச் சோலைகள்