பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 கன் பெரும் படைத் தலைவனம் கருணுகரனின் ஆற்றலே நீ அறியாய். பாண்டியர் ஐவர் அழிவுற்றதும், படைத் தலைவன் கருணுகரனல் அல்லது பேரரசன் குலோத்துங்கல்ை அன்று; சோழர் படைத் தலைவனல் சேரர் பட்ட பாட்டினை நீ அறியாயோ? கவிலையில் ஆயிரம் ஆயிரம் களிறுகளைக் கைப் பற்றியதும் கருணு கரனே, அளத்தி அழிவு கண்டானும் அவனே, வத்த காட்டை வென்று அடிமை கொண்டதும் அவன் கை வாளே. சோழர் படைத் தலைவல்ை தம் அரசிழந்து அல்லலுறும் அரசர்களே எண்ணிக் கூறல் இயலுமோ? ..உண்மை இதுவாகவே, வேங்தன் வந்திலன்; படைத் தளபதியே வந்துளான் எனப் பழிப்பது பொருங்தாது. கருணுகரன் கைவன்மையை இன்று பழிக்கும் ,ே நாளே அவன் எத்தகையான் என்பதைக் களப் போர்க்காலத் தில் நீயே அறிந்து கொள்வாய், ஆகவே, வீணே வெறி பிடித்து அலேயாது தவறிய திறைகளைத் தங்து தாள் பணிந்து போவதே நன்று' என அரசியல் முறைகளே அடைவே எடுத்து இயம்பினன். - அமைச்சர் கூறிய அறிவுரைகளே அனந்தவன்மன் ஏற்றுக் கொண்டானல்லன். மாருக அவர் அறிவுரை கூறக், கூற அவன் சினம் அளவிறந்து பெருகிற்று: அதல்ை, 'அமைச்சரவர்களே! உம்முடைய பேதை மையில்ை, எம்முடைய தோள்வலியும் வாள்வலியும் அறியாத பிறர் போல் இவ்வளவும் உரைத்து முடித்தீர்; பழியுரை புகன்று பிழை புரிந்து விட்டீர்; எம் கலன் குறித்துக் கூறுவதாக விேர் எண்ணிக் கூறும் உம் அறிவுரை, எம் பெருமைக்கு மாசூட்டு வதாக அமைவது மாண்புடைத்தன்று; ஆகவே வேண்டாம் உம் அறிவுரை” என அவர் வாயடைத்து விட்டு, கலிங்கக் கோட்டையின் காவலனே அழைத்து, 'அரணகத்துப் படைகளே இப்போதே போர்க்களம் புகவிடுக நாடெங்கும் போர்ப்பறை முழங்கட்டும்: