பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 கொடிச் சீலைகளால் தம் உடலே மறைத்துக கொண்டு, சாக்கியச் சங்கியாசிகள் யாம்; எம் உடை அது உணர்த்துவது காண்மின்” எனக் கூறியவாறே களம் விட்டு வெளியேறினர் சில கலிங்கர். களத்தில் வீழ்ந்து மடிந்த யானைகளின் மணிகளைக் கையிற் கொண்டு, 'பாடிப் பிழைக்கும் பாணர் யாம்; களக் கொடுமை கண்டு கலங்கி நிற்கின்ருேம் எனக் கூறிப் பிழைத்த கலிங்கர்க்கோ கணக்கில. கலிங்கப் படையின் கதி இதுவாகவே அவர் காவலன் அனந்தவன்மன், சோணுட்டுப் படைகள் புகமாட்டாப் புகலிடம் சென்று ஒளிந்துகொண்டான். - கலிங்க நாட்டவர் களத்தில் விட்டுச் சென்ற வேழத்திரளேயும், விரைந்து பாயும் குதிரைக் கூட்டத் தையும், நெடிய பெரிய தேர் கிரைகளேயும், உயர்ந்த ஒட்டகங்களையும், நவநிதிக் குவியல்களையும், கங்கையர் குழாத்தையும் குலோத்துங்கன் உடைமையாக்கி உளம் நிறை மகிழ் வெய்திய கருணுகரன் அனந்தவன் மன் அகப்பட்டிலன் என அறிந்ததும், ஒற்றர்களைக் கலிங்க மெங்கும் கணப் பொழுதில் போக்கித் தேடப் பணித்தான். மாலை மறைய மயங்கிருள் சிறையும் போது, அனந்தவன்மன் மலேக் குகை யொன்றில் மறைந்துளான் என அறியவே, வில் வீரர்களையும், வாள் வீரர்களேயும், அம் மலேயைச் சூழ வரிசையாக அணிவகுத்து நிறுத்தி, விடியும் வரை விழித்து இருந்து காக்குமாறு பணித்தான். கருணுகரன் பணித்த வரை காலப் போதைக் காணும் வரையும், அவ்வரையைக் கண்மூடாது, காத்து நின்றது சோழர் படை. காலேயில் அம்மலை அடைந்து அனந்தவன் மனேக் கைப்பற்றிக் கைதியாக்கினன் கருணுகரன். இவ்வாறு கலிங்கத்தை வெற்றி கொண்டு, கலிங் கக் காவலனேக் கைக்கொண்டு, காஞ்சி அடைந்த கருளுகரனுக்கு வளம் மிக்க வண்டைமா நகரை