பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. நரலோக வீரன் குலோத்துங்கன் கா ல த் து க் கல்வெட்டுக் களிலும், அவன் மகன் விக்கிரம சோழன் காலத்துக் கல்வெட்டுக்களிலும், இம் மாவீரன் பெயர் கூத்தன், மணவிற் கூத்தன், அரும்பாக்கிழான், பொன்னம்பலக் கூத்தன், காலிங்கர் கோன், காலிங்க ராயன், தொண்டைமான், அருளாகரன், மானவதாரன், ாரலோக வீரன் எனப் பல்வேறு வகையாக வழங்கப் பெறுகிறது. எனினும், சிதம்பரம் கோயிலைச் சுற்றி இவன் சமைத்த மதிலுக்கும், அதுபோலும் வேறு பல மாடங்களுக்கும் மண்டபங்களுக்கும் இவன் பெருமை. யாக இட்டு வழங்கிய பெயர் நரலோக வீரன் என்பதே எனத் தெரிவதால் நாமும் அவனே அப்பெயரினலேயே அழைப்போமாக! கரலோக வீரன், தொண்டை மண்டலத்து. வடார்க்காடு மாவட்டத்து, செய்யாறு வட் டத்தைச் சேர்ந்த மணப்பாக்கம் எனும் சிற்றுாரில் பிறந்து, அதற்கு ஐந்தாறு கல்தொலைவில் உள்ளதும், பாலாற்றங்கரைக்கு அணித்தானதும், அம்மாவட். டத்து வாலாசா வட்டத்தைச் சேர்ந்ததுமான அரும்பாக்கம் ஊரை, உரிமை கொண்டு வாழ்ந்த, வேளாண்மரபினனவன். இவ்வரலாற்று உண்மைகள், கல்வெட்டுகளில் அவன் மணவிலார் ஏறு' எனவும், “அரும்பாக்கிழான்' எனவும், வேளாண் குடிமுத லான்’ எனவும் வழங்கப்பெறுவதால் புலகிைன்றன.