பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 தொண்டை நாட்டில் பிறந்த இவன், சோணுட் டுப் படையில் பணியேற்றுப் பாண்டி காட்டுப் போர்க் களத்திலும் அதற்கும் அப்பாற்பட்ட சேரநாட்டுப் போர்க்களத்திலும் பெற்ற வெற்றிகள் பெரிதும் பாராட்டத் தக்கனவாம். இராசராசன், இராசேந்திரன் போலும் பேரரசர்களால் அடிமை ஆகிச், சோழர் பேரரசிற்கு அடங்கி வாழ்ந்துவங்த பாண்டியர்களும், சேரர்களும் தம்உரிமையை மீண்டும் கிலே நாட்டுதற் காம் கல்வாய்ப்பை நாள்தோறும் எதிர்நோக்கி கெடிதுநாள் காத்துக்கிடங்தனர். அவ்வாறு காத் திருந்த அவர்கள், இராசேந்திரன் மகன் வீரராசேங் திரன் ஆட்சிக்குப் பிறகு அரியணேயில் அமர்ந்த அவன் மகன் அதிராசேந்திரன், அரியணே அமர்ந்து ஆறு திங்கள் ஆவதற்குள் இறந்து விட்டமையால் நேர்ந்த, சோணுட்டுச் சோழர் ஆட்சியை அகற்றி விட்டு சுய ஆட்சி மேற்கொண்டு விட்டனர். அதிராசேந்திரன் மறைவால் அரசிழந்து அல்லல் படும் சோணுட்டின் துயர்தீர்ப்பான் வேண்டி, சோழர் அரியணையில் வங்து அமர்ந்த குலோத்துங்கன், சேரரும் பாண்டியரும் செய்த முடிவினைக் கண்டான் என்ருலும், வடவெல்லேக் கண், மேலைச்சாளுக்கிய விக்கிரமாதித்த மாவீரன் பெரும் படையோடு வந்து கிற்கும் போது, சேர, பாண்டிய நாடுகள் மீது சிங்தை யைப் போக்குவது பொருந்தாது என எண்ணிச் சிலகாலம் ஏதும் செய்திலன். விக்கிரமாதித்தனையும், வடகலிங்கவேங்தனேயும் வென்று வடவெல்லேயை வலுப்படுத்திய பின்னர் குலோத்துங்கன் தென்ன. கத்து ஆட்சி நிலத்தில் சிந்தையைப் போக்கினன். சேரரையும், பாண்டியரையும் ஒரு சேர வெற்றி கொள்ளுதல் வேண்டும். அது மட்டும் போதாது; அவர்கள் உள்ளத்தில் உரிமை வேட்கை மீண்டும் உருப்பெற வழிவகுத்தல் கூடாது என்று கருதின்ை; த-10 . . . . . ...... . . . . . . ." , , . ., '