பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 அவ்வாறு கருதியவன், அதை எண்ணிய எண்ணி யாங்கு முடிக்க வல்ல திண்ணியான் யாவன் என ஆராய்ந்து நோக்குவான் கருத்தில், வேங்கி என வழங்கும் கீழைச்சாளுக்கியத் தலைநகரையும், ஒட்டம் என வழங்கும் ஒரிஸ்ாவையும், இராட்டிர கூடரின் அரசிருக்கையாம் மராட்டியத்தையும் வென்று, வட வரசர்களின் வாழ்வழித்த நரலோக வீரனே வந்து. தோன்றினன். ஆகவே அவனே அப்படைக்குத் தலைவனுக்கி அனுப்பினன். படையோடு தென்னடு நோக்கிப் புறப்பட்ட கரலோக வீரன் முதற்கண் பாண்டி காட்டின் மீது பாய்ந்தான்; பாண்டி நாட்டை ஐம்பெரும் பிரிவு: களாக்கி ஆங்காங்கே இருந்து ஆண்டு கொண்டிருந்த அரசிளங்குமரர் ஐவரும் நரலோக வீரனின் முன் கிற்க. மாட்டாது காடுபுகுந்து கரங்து கொண்டனர். பாண்டி யரை வெற்றி கொண்ட நரலோக வீரன் அங்காடெங். கும் வெற்றித் துரண்களே காட்டினன். பாண்டி யர்க்குப் பெருமை அளிக்கும் முத்துக் கிடைக்கும் கொற்கை முதலாம் கடற்றுறைப் பட்டினங்களும் சங்தனம் வளரும் பொதிகை மலேயும், குமரி முனையும் மீண்டும் சோழர் உடமையாயின. இவ்வாறு பாண்டி காட்டைப் பணிகொண்ட பின்னர் நரலோக வீரன் சேரங்ாடு சென்று சேர்ந்தான். மலேகாட்டவர் மறங் கொண்டு மலேங்தனர் என்ருலும் மாவீரன் நரலோக வீரன் முன், அவர்தம் ஆற்றல் நிலைத்து நிற்க. மாட்டாது மங்கி மறைந்தது. விழிஞம், கோட்டாறு, காங்தளூர்ச்சாலை முதலாம் மேலேக் கடற்கரை மாங்கர் களில் நிகழ்ந்த போர்கள் அனைத்திலும் நரலோக வீரனே வெற்றி பெற்ருன். காந்தளூர்ச் சாலைக்கண் நிறுத்தி வைக்கப் பெற்ற சேரகாட்டுக் கடற்படை அழிக்கப் பட்டது. கோட்டாறு எரிக்கு இரை ஆயிற்று. சேரமன்னன், செரு வொழிந்து வந்து சோழர் அடிமை ஆயினன்.