பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 தன் படைத் தலைவகைப் பணியேற்றுத் தென் தமிழ் நாடுகளில் அமைதி நிலவும் சோழர் ஆணேசெல ஆவணபுரிந்த நரலோக வீரனுக்கு நாடு போற்றும் நல்லன செய்ய விரும்பிய வேந்தன் குலோத்துங்கன், நெய்வணே நகரில் நரலோக வீரன் சமைத்த கோயிலுக் குச் சில விளே நிலங்களைச் சுங்கம் தவிர்த்த சோழ கல்லூர் எனத் தன் பெயரால் பெயர் குட்டித் தேவ தானமாக வழங்கிப்பெருமை செய்தான். தில்லையிலும், திருவதிகையிலும் உள்ள கல்வெட்டுக்களில் காணப் படும் அறுபதுக்கும் மேற்பட்ட அழகிய வெண்பாக் கள், நரலோக வீரனின் பெருமைகளே, பேரறச் செயல் களேப் பாடி பரவுகின்றன.