பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

"அந்தோ! என் மகனாக, உன்னைப் பெற்ற யான்.உளம் நொந்து உறுதுயர் கொள்வதல்லது வேறு யாது செய்யவல்லேன்.ஊன்றி நோக்கினால் உன்னை நொந்து பயனில்லை.பகைமன்னர் கூடி உடற்றும் மண்டமரில் எதிர்த்தார் அனைவரையும் அழித்துவிட்டு, வாட்புண் பெற்று,அக்களத்திலேயே வீழ்ந்து, விழுமிய பெருநிலை பெறுவதை விடுத்து,களிற்றின் மீது எறிந்த தன் கைவேல், அக்களிற்றின் உயிரைப் போக்காதாக,அக்களிறு,தன் முகத்தில் தைத்த அவ்வேலோடே, அக்களமெங்கும் வீர உலா வர, வெறுங்கையோடு வீடு வந்து சேர்ந்து, எம்குடி இதுகாறும் செய்தறியாப் பெரும்பழியைத் தேடித் தந்த உன்னைப் பெற்றெடுத்ததே என் வயிறு, அதையே நோகவேண்டும்.மறக் குலத்தார் மாண்பும் மரபும் இன்ன என்பதைக் கல்லாத காளையை ஈன்ற வயிறே, நீ வாழ்விழந்து போவாயாக!" என்று வயிற்றில் அறைந்துகொள்ளும் வீரத் தாயைக் காட்டும் தகடூர் யாத்திரையிலும்,

வாதுவல், வயிறே! வாதுவல், வயிறே!
நோவேன் அத்தை; நின்னீன் றனனே;
பொருந்தா மன்னர் அருஞ்சமம் முருககி,
அக்களத்து ஒழிதல் செல்லாய்; மிக்க
புகர்முகக் குஞ்சரம் எறிந்த எஃகம்
அதன்முகத்து ஒழிய நீ போந்தனையே;
அதனால், எம்இல் செய்யாப் பெரும்பழி செய்த
சுல்லாக் காளையை ஈன்ற வயிறே!"

'ஊழிவெள்ளம் ஒருவாறு மறைய, அதையடுத்து மலைமட்டுமே தோன்ற, மண் தோன்றாதாகிய அத் துணைப் பழங்காலந் தொட்டே, வாட்போரில் வல்லவ ராகிய வீரர்களைப் பெற்றளிக்கும் பழமையும் பெருமையும் வாய்ந்த குடியில் வந்த இவன், நாள்தோறும் வெற்றிப் புகழால் வீறெய்வதில் வியப்பென்னஉளது?' என் ஐயன் ஆரிதனார் அவர்கள் எழுப்பும் ஐயம்