பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

தம் குலத்து வந்த இளம் மகார்கள், படைக்கலப் பயிற்சி பெறும் கல்வியைப் பெரிதும் போற்றிப் பேணி வந்துள்ளனர்.

தமிழகத்தை அடிமைகொள்ளும் தருக்குமிகு குறிக்கோளுடையராய் நெடிய பெரிய தேர்ப்படை யோடு தமிழகம் புகுந்து வட இந்திய மௌரியப் பெரும் படையை மோகூர் முனையகத்தே முறியடித்து ஒட்டியவரும், பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்றான் படையில் பணிபுரிந்தவருமாகிய கோசர் என்ற குலத்தவரின் இளைஞர்கள், முருக்க மரத்தான் இயன்ற இலக்கை அமைத்துக் கொண்டு, வேல் எறிந்தும், வில்வளைத்து அம்பேவியும் படைக்கலப் பயிற்சி பெறும் பண்பாட்டினைப் புலவர் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனாரும்,

"இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்
இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின்
பெருமரக் கம்பம்."

தமிழகத்து ஊர்தோறும் உள்ள பொதுவிடங்களில், இலந்தைபோலும் இனியகனிதரு மரங்களின் நிழலில் விளையாடும் இளம் மகார்,வேறு பயனிலா விளையாடலை விரும்பாது,வில்லும் கணையும் கொண்டு விளையாடும் வீரவிளையாடலையே விரும்புவதை, உறையூர் முதுகண்ணன் சாத்தனாரும்,

"மன்றத்து
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்
சுயந்தலைச் சிறார் கணைவிளை யாடும்
அருமிளை இருக்கை"

வில்லும் அம்பும் கொண்டு வேட்டம் புரிவதையே தொழிலாகக் கொண்ட வேட்டுவர் தம் சிறுவர்கள், மனைப்புறம் விட்டகலா நனி இளம் பருவத்



த-2