பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

"கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின வேந்தே!
தார் அணி எருத்தின், வரால் வள் உகிர்
அரிமான் வழங்கும் சாரல், பிறமான்
தோடுகொள் இனநிரை நெஞ்சு அதிர்ந்தாங்கு.
முரசுமுழங்கு நெடுநகர் அரசுதுயில் ஈயாது
மாதிரம் பனிக்கும் மறம்வீங்கு பல்புகழ்
கேட்டற்கு இனிது."

இவ்வாறு பிறப்பு முதலாகப் பேராண்மை ஈறாகச் சொல்லப்பட்ட அனைத்து வகையாலும் சிறந்தவர்களைப் "பிறப்பும் பெருமையும் சிறப்பும் செய்கையும் அரசறி பெயரும் உரைசெயல் ஆண்மையும் உடையோராகிய படைகோள் மாக்கள்" எனும் பெரும் பெயர் சூட்டிப் பாராட்டி, அத்தகையோர்களையே தேடிப் பெற்றுப் படைத்தலைமை அளித்தார்கள் பண்டைத் தமிழ் அரசர்கள்.

பெய்யாத மழை பெய்துவிட்டதாயினும், அம்மழை ஈரம் புலர்வதற்கு முன்பே தன்நிலம் அனைத்தையும் உழுதுவிட வேண்டுமாயினும்,தன்பால் உள்ள உழுவெருதுகள் அனைத்தையும் பயன்கொள்ள நினையாது, அவ்வெருதுகளுள்,தன் உள்ளத்தின் விரை வறிந்து, உழுதுமுடிக்க வல்ல நல்லெருதுகள் யாவை என்பதை ஆராய்ந்து நோக்கிப் பயன் கொள்ளும் தொழில் அறிந்த உழவன் போல், தன் படையைச் சேர்ந்த வீரர் பலராயினும், அவர் அனைவருமே சிறந்த ஆண்மையாளர் எனினும், மேலே கூறிய மாண்புகளில் அனைத்தையும் குறைவறைப் பெற்றிருப்பான் யாவன் எனத்தேர்ந்து, அவனுக்கே படைத்தலைமை அளித்து வந்த பண்டைத் தமிழ் வேந்தர்கள் பேரறிவு நலத் தைப் புலவர் கழாத்தலையார் கவினுறப் பாராட்டியுள்ளார்.

"ஈரச் செவ்வி உதவின ஆயினும்
பல்எருத் துள்ளும் நல்எருது நோக்கி