பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

களிறு களப் படுத்த பெருஞ்செய் ஆடவர்
ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து.
வடந்தைத் தண்வளி எறிதொறும் நுடங்கித்
தெற்கேர்பு இறைஞ்சிய தலைய, நற்பல்
பாண்டில் விளக்கின் பரூஉச்சுடர் அழல,
வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகமொடு
முன்னோன் முறைமுறை காட்டப், பின்னர்
மணிபுறத் திட்ட மாத்தாள் பிடியொடு
பருமம் களையாப் பாய்பரிக் கலிமா
இருஞ்சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்பப்
புடைவீழ் அந்துகில் இடவயின் தழீஇ
வாள்தோள் கோத்த வன்கட் காளை
சுவல்மிசை அமைத்த கையன், முகன் அமர்ந்து
நூல்கால் யாத்த மாலைவெண் குடை
தவ்வென்று அசைஇத் தாதுளி மறைப்ப
நள்ளென் யாமத்தும பள்ளி கொள்ளான்'
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே."

இன்முகம் காட்டியும் அன்புரை வழங்கியும் படையாளர் தம் பிணிபோக்கும் நெடுஞ்செழியன் போர் முடிந்ததும், போரில் அவரவர் புரிந்த பணிக்கேற்பப் பொருள் வழங்கிப் புரப்பதிலும் வல்லனாவன். பாண்டியன்பால் காணலாம் இப்பண்பு நலத்தை, அவன் அவைக்களப் புலவராம் மாங்குடி மருதனார், மதுரைக் காட்சியில் மாண்புறக் கூறிப் பாராட்டியுள்ளார்.

அமைச்சர் ஆன்றோர் சூழ அரசவைக்கண் வந்து அமர்ந்ததும், நெடுஞ்செழியன் தன் படைத்தலைவனை அழைத்து, கரைகளை அழித்துக்கொண்டு பெருகி வரும் வெள்ளத்தை இடைநின்று தடுக்கும் கல்லணை போல் நம்படைகளை அழித்துவிட்டு ஆற்றல் கொண்டு