பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

கள் ஒன்று கூடிவந்து பசும்பூண் பாண்டியனை வளைத் துக் கொண்டார்கள்.

"நாமோ பேரரசர்; மேலும், பெரும் படையும் உடையேம். பாண்டியனோ பச்சிளங்குமரன்; அவனை வென்றால் அடையலாகும் பொருளோ அளப்பரியன" என்று எண்ணி வந்த பகைவர்களின் பெரும்படை பாண்டிநாட்டுத் தலைநகரை வளைத்துக் கொண்டது. அஃதறிந்தான் நெடுஞ்செழியன்; அளவிறந்த சினம் கொண்டான். "என்னை எதிர்த்து வந்திருக்கும் ஏழரசர்களையும் நான் ஒருவனாகவே நின்று வெல்வேன். அவர்தம் கொடி முரசுகளைக் கைக்கொண்டு துரத்துவேன். இதில் தவறுவேனாயின், கொடியன் எம் இறை' எனக் குடிகள் பழிதூற்றும் கொடுங்கோல் ஆட்சி புரிவானையும், பாடிப் பாராட்டும் புலவர்களும் நண்பர்களும் பழித்து நீங்க இழிகுணம் பெறுவானை யும் வந்தடையும் அழிவும், இழிவும், பழியும் வந்து என்னையும் பற்றுமாக" என வஞ்சினம் உரைத்தான். வாளையும் குடையையும் போர்க்களம் நோக்கிப் போக்கிவிட்டுத் தானும் களம்புகுந்து போரிட்டான்.

நெடுஞ்செழியனோடு களம் புகுந்தான் அதியனும். வந்துள்ள பகையரசர்களுள், யானைக்கண்சேய் மாந்த ரஞ்சேரல் இரும்பொறை கொண்டுவந்திருக்கும் கொங் குப்படைகளே கொற்றம் மிக்கவை; கொடுமை புரிவதிலும் பெரியவை என்பதை அதியன் அறிவான். மேலும்,கொங்கு நாட்டை அடுத்திருந்த நாட்டான் ஆதலின், அதியன், அப்படையின் ஆண்மை, ஆற்றல், அமைப்பு முறைகளை அறிந்திருந்தான். அதனால், கொங்குப் படையை வெற்றிகொள்வது அவனுக்கே எளிதாம் என அறிந்த பாண்டியனும், அவனை அப் படைமீதே ஏவினான்.

அதியன், தன் விற்படையோடும் வேழப்படை யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் யோடும் சென்று