பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

அடைந்து வாழ்ந்திருந்தான். மேலும், அம்மலை நாட்டைப் பகைவர் அணுகலாகா அரண் உடையதாக்கி, அதில் பாண்டி நாட்டின் கொடிபறக்க ஆண்டிருந்தான்.

அதியன், பாண்டிநாட்டின் மேற்கெல்லைக் காவலனாய்த் தன் மலைநாட்டில் வாழ்ந்திருந்தபோது, அள்ளன் என்ற பெயருடைய குறும்பன் ஒருவன், பாண்டியர்க் குரியதும், நெல்வளம் மிக்கதுமாகிய அள்ளூரைக் கைப்பற்றிக்கொண்டான்; அஃதறிந்த பாண்டியன், அதியனை அழைத்துப் பெரிய பெரிய வேழப்படைகளையும் வென்று பாழாக்கவல்ல பெரிய வாள்வீரர் படையை அவன்பால் ஒப்படைத்து, அள்ளனை வென்றுவர ஆணையிட்டான். வீரர் பலரை வென்று, அவ்வெற்றிப் புகழால் செருக்கித் திரிபவன் அவ் அள்ளன். அவன் அத்தகைய போர் வெறி பிடித்து அலைபவன் என்பதை அறிந்தும், அஞ்சாது சென்று அவனை வளைத்துப் போரிட்டான் அதியன். வீரர் பலரை வெற்றிகொண்ட வீறுடையனாகிய அள்ளன், அதியனுக்குத் தோற்றான். அவனுக்கு அடிமைப்பட்டு, அவன் ஏவும் ஏவல்களைச் செய்து சீரழிந்தான். அள்ளூர், மீண்டும் பாண்டியர் உடை மையாயிற்று.

பெரிய வீரனாய்ப், பாண்டிநாட்டின் பெரும் படைத் தலைவனாய் வாழ்ந்திருந்த அதியன், வாகை என்னும் ஊரில் வாழ்ந்திருந்த எயினன் என்பானோடு பகை கொண்டிருந்தான். அப்பகை முற்றவே, அதியன் வாகைக்கே சென்று எயினனை எதிர்த்தான். தனக்குத் துணையாகக் களிற்றுப் படையையும் கொண்டு சென் றிருந்தான்.ஆனால் அந்தோ! முடிவு வேறாகி விட்டது. ஆண்டு முதிர்ந்து விட்டமையாலோ, வாகையைக் கைப்பற்றவேண்டும் என்ற வேட்கை மிகுதி யால் போர் முயற்சிகளை விரைந்து மேற்கொண்டு