பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

யரிசியையும் இட்டு,அச்சோறுண்ணுவதில் சென்ற வேட்கை மிகுதியால், அப்பானையின் புறத்தைக் கழுவ மறந்து அடுப்பில் ஏற்றி,சந்தன விறகிட்டு எரித்து ஆக்கி இறக்கி வைத்த உணவை, கூதாளிச் செடிகள் வளர்ந்து வனப்புற்றிருக்கும் மனையின் முற்றத்தில் நிற்கும் வாழை மரங்களிலிருந்து அறுத்துக் கொணர்ந்த அகன்ற இலைகளில் இட்டும், ஊரும் சுற்றமும் ஒன்றுகூடி யிருந்து உண்டு மகிழ்வர். கானவர்களின் இத்தகைய கவலையற்ற குடியிருப்புக்களைக் கொண்டது குதிரைமலைச்சாரல்.

குதிரைமலை மற்றொரு வகையாலும் மாண்புற் றிருந்தது. அம்மலை, விலைமதிக்க வொண்ணாத மாணிக்க மணிகளை நிறையப் பெற்றிருந்தது. ஐவனம் என்ற மலை நெல்லை விதைத்திருக்கும் கானவர்,அது கதிர் ஈன்று முற்றும் காலத்தில், அதற்குக் காட்டு விலங்குகளால் அழிவுவரக் கூடாதே என்ற கவலையால் காவல் மேற்கொண்டிருப்பர். அக்காவல் மேற்கொள்ளும் அக்கானவர், இரவில் காட்டு விலங்குகளின் வருகையைக் கண்டுகொள்வதற்குப் பெரிய பெரிய தீப்பந்தகளைக் கொளுத்தி வைப்பர். காற்றாலோ கனமழையாலோ அவை ஒரோவழி அவிந்துபோயினும் கானவர் கவலை கொள்ளார். அம்மலைச்சாரல் மண்ணில் மண்டிக் கிடக்கும் மாணிக் கங்கள், தம் பேரொளியால், இரவின் கார் இருளை அகற்றி, அம்மலைச் சாரலைப் பகல்போல் ஒளிவிடச் செய்யும். அவ்வளவு பெரிய மாணிக்க மணிகள், அவ்வளவு பெருமளவில் ஆங்கே மண்டிக்கிடக்கும்.

மாணிக்க மணிகளாகிய மாநிதியால் மாண்புற்றிருந்த அம் மலைநாட்டைப் பிட்டங் கொற்றன் என் பான் ஆண்டிருந்தான். பிட்டங் கொற்றனுக்குச் சிறிது முற்பட்ட காலத்திலோ பிற்பட்ட காலத்திலோ, அக்குதிரை மலையை ஆண்டிருந்த அதியமான்