பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5.திருக்கண்ணன்

மூவேந்தர் ஆட்சிக்குட்பட்ட நாட்டில், அவர் ஆட்சிக்கு அடங்கியும் அடங்காதும் சிற்சில சிற்றரசர் கள் ஆங்காங்கிருந்து ஆட்சிபுரிந்து வந்தனர். அதியர்,ஓவியர்,மலையர், வேளிர் என்பன போலும் குடியில் வந்த அவர்கள், ஆங்காங்குள்ள மலைகளைத் தம் அரண்களாகக் கொண்டு,பேரரசர்களுக்குச் சிலகாலங்களில் பகைவர்களாகவும், சிலகாலங்களில் நண்பர்களாகவும் இருந்து அரசோச்சி வந்தனர். அவர்களுள் மலையர் எனவும் மலையமான்கள் எனவும் அழைக்கப்பெறும் அரச இனத்தவர், சோழநாட்டில், தென்பெண்ணை யாற்றங்கரையில் உள்ள திருக்கோவலூரைத் தலைநகராகக்கொண்டு ஆண்டுவந்தனர். மணம்மிக்க மலர் மரங்கள் நிறைந்த முள்ளூர் மலைமீது அணுகவோ, அழிக்கவோ இயலா அரண்மிக்க கோட்டை ஒன்றை யும் கட்டி வைத்திருந்தனர். அந்நாடு காடுகளுக்கும் மலைகளுக்கும் இடையே இருந்தமையாலும், கடலுக்கு நெடுந் தொலைவில் இடம் பெற்றமையாலும், அது கடல் நீராலோ, பகைவர்களின் கடல் நிகர் படையாலோ பாமுறுவதில்லை. முள்ளூர் மலையைக் கைப் பற்ற வேண்டும் என்ற கருத்தோடு அணுகிய ஆரியர் படையெடுப்பும் முறியடிக்கப்பட்டதே யல்லது, அவ் வாரியர் முன்னிவந்தது முற்றுப் பெறவில்லை.அத்துணை அரண்மிக்கது அந்நாடு.

மலாடு அல்லது மலையமான் நாடு என அழைக்கப்பெறும் அம் மலைநாட்டை ஆண்டவருள் காரி என் பவன் சிறந்தவன்.மலையமான் திருமுடிக்காரி என்றும்