பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

நாடெங்கும் சென்று பரவியிருந்தது. "கொடுக்கிலா தானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரிலை" எனக் கொடைப் புகழிற்கு அவனையே எடுத்துக் காட்டினார்கள் புலவர்கள் எல்லோரும். அவ்வாறு அவன் புகழ் பெருகுவது கண்டு மனம் பொறாத முடி வேந்தர் மூவரும், அவனை வஞ்சனையால் கொன்று விட்டார்கள். அவனுக்கு மகளிர் இருவர் இருந்தனர். அறிவில் சிறந்த அரிவையர் அன்னார். அவர்களைத் தக்கார்க்கும் மணம் செய்துவைக்க விரும்பினார் பாரியின் உயிர் நண்பராகிய கபிலர். ஆனால், அம்மகளிரை மணந்தால், அவர் தந்தையின் பகைவர்களாகிய மூவேந்தர்கள், தம் உயிரையும் முடித்து விடுவரோ என்ற அச்சத்தால் அவரை மணக்க, மன்னர் எவரும் முன்வந்திலர். இறுதியில் அருந்தமிழ் மூதாட்டி ஒளவையும்,பெரும்புலவர் கபிலரும் ஒன்றுகலந்து, பாரி மகளிரை மணக்கத்தக்க மாண்பும், அதற்கேற்ற மனவுறுதியும் உடையவர் மலையமான் திருமுடிக்காரியின் மக்களே எனத் துணிந்தனர். உடனே, இருவரும் முள்ளூர் அரண் அடைந்து மலையமான் மக்களுக்குத் தங்கள் விருப்பத்தை வெளியிட்டனர். தங்கள் தந்தையின் காலந்தொட்டே, அப்பெரும் புலவர்களின் பெருமையினை அறிந்திருந்த அவ்வரசிளங்குமரர்கள், அவர்கள் வேண்டியவாறே, பாரிமகளிரை மணந்து மனையறம் மேற்கொண்டு மகிழ்ந்திருந்தனர். மலையமான் மக்களாகிய அவ்விரு வரில் ஒருவனே திருக்கண்ணன்.

வள்ளல் பாரியை வஞ்சனையால் கொன் வேந்தர் வழியில் வந்தவனும், தன் தந்தையைக் கொன்று தன்னையும் தன் உடன்பிறந்தானையும் யானைக் காலின் கீழ் இட்டுக் கொல்லத் துணிந்தோனும் ஆகிய கிள்ளி வளவன் வழிவந்தோர்பால் மாறாச்சினம் கொண்டிருந்தான் திருக்கண்ணன். தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பும், அவனுக்கு அண்மையிலேயே