பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

கிடைத்தது.பேரரசன்கரிகாலனுக்குப்பிறகு சோழநாடு இரண்டாகப்பிரிந்து விட்டது. உறையூரையும் அதைச் சூழ உள்ள உள்நாடுகளையும் கைப்பற்றிக்கொண்டு ஒரு கிளையினரும், புகாரையும் அதை அடுத்திருந்த கடற்கரை நாடுகளையும் கைப்பற்றிக்கொண்டு மற்றொரு கிளையினரும் ஆட்சிபுரியத் தொடங்கினர். அவ் விருதிறத்தார்க்கிடையே தோன்றிய பங்காளிப்போர் கிள்ளிவளவன் காலத்திலேயே தொடங்கிவிட்டது. கிள்ளிவளவனும் அவன் தம்பி நலங்கிள்ளியும் ஒரு பக்கமும், நெடுங்கிள்ளி என்பான் மற்றொரு பக்கமும் நின்று போரிட்டுச் சோணாட்டு அரசியல் அமைதியைக் குலைத்தனர். இறுதியில் நெடுங்கிள்ளி உயிரிழந்து போனான். பிற்காலத்தில் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி எனும் பெயர்பூண்டு பேரரசனாய் வாழ்ந்த நெடுங்கிள்ளியின் ஒரே மகனையும் பகைவர்கள் அழித்துவிடத் துணிந்திருந்தனர்.

சோணாட்டில் இவ்வரசியற் குழப்பநிலையைத், தன் வஞ்சம் தீரப் பயன்கொண்டான் திருக்கண்ணன். மேலும், இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளியின் நாட்டின் நலிவினைக் காணத் திருக்கண்ண னால் இயலவில்லை. தன் தந்தையாம் மலையமான் திரு முடிக்காரியின் படைத்துணையால் பெருமையுற்றது அச்சோணாடு. தன் தந்தையின் காவல் வன்மையால் பெருமையுற்ற நாடு, தான் காணப் பாழுற்றுப் போவதை அவனால் தாங்க முடியவில்லை. அதனால் சோணாட்டு அரசியலில் துணிந்து அடியிட்டான். அரசிளங்குமரனை அவன் பகைவர் பற்றிக்கொள்ளா முன்பே, அரும்பாடுபட்டுக் கொண்டுவந்து தன் முள்ளூர்க் கோட்டைக்குள் சேர்த்துவிட்டான். அணுகுதற்கரிய அரண்மிக்கது அம்முள்ளூர்க்கோட்டை. அதனால், பகைவர்கள் மலையமான் நாடுபுக மருண்டனர். மேலும் திருக்கண்ணன் பேராற்றல் வாய்ந்தவன். யங்காளிப் போரால் படைவலி இழந்திருக்கும் தம்மால்