பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

அவனை வெல்லுதல் இயலாது என்பதையும் அறிந் திருந்தனராதலின், அவர்கள் ஆற்றல் இழந்து அடங்கி விட்டனர்.

முற்றி வளைத்த பகைவர் பலரும் தோற்றுப் பின்னிடும்படி வெற்றிகண்ட விழுப்புகழ் வாய்ந்த முள்ளூர் மலையரணில், சோணாட்டு அரசிளங்குமரன் இனிதே வாழ்ந்திருந்தான். பகைவர்களும் வன்மை இழக்கட்டும். அவர்களை வெற்றிக்கொள்ளும் வகையில் தன் படையும் பயிற்சி பெறட்டும். அரியணையில் அமர்ந்து ஆட்சிபுரியத்தக்க அறிவும் ஆற்றலும் இளவரசனுக்கும் பெருகட்டும் என்ற கருத்தோடு சில காலம் காத்திருந்தான் திருக்கண்ணன். ஆனால், அரசிழந்து அல்லலுறும் சோணாட்டின் அவலநிலை, அவனை நெடுங்காலம் காத்திருக்க விடவில்லை. வெற்றி முரசும், விழாமுரசும் ஓயாது ஒலிக்கும் சோணாட்டில் எங்கும் அழுகுரலே கேட்டது. காவிரியாற்றுப் பாய்ச்சலால் வளங்கொழிக்க வேண்டியநாடு வளமிழந்து வனப்பழிந்து காட்சி அளித்தது. அதனால் அந்நாட்டு அரசியல் வாழ்வில் துன்பம் நீக்கி இன்பம் பொங்கும் நிலையை விரைந்து நிலைநாட்ட விரும்பினான். உடனே பெரும்படையோடு புறப்பட்டுச் சோணாடு புகுந்தான். பாழ்புரிந்துகொண்டிருந்த பங்காளிகள் அனைவரையும் அழித்தான். நாட்டில் அமைதியை நிலைநாட்டினான். அரசிளங்குமரனை அரியணையில் அமர்த்தி அரசனாக்கினான். தாழ்ந்த அவன் குடையை எடுத்து நிறுத்தினான். சோணாட்டு வாழ்வில் புதிய உணர்ச்சியும் இன் பமும் உருப்பெற்றன. சோணாட்டு மக்கள், திருக் கண்ணனைத் தங்கள் சிந்தை மகிழ்ந்து வாழ்த்தினார்கள்.

இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியின் முடி சூட்டு விழாவிற்கு வந்திருந்த புலவர்களுள் ஒருவராய் மாறோக்கத்து நப்பசலையார் என்ற பெண்பாற் புலவர், திருக்கண்ண! கோடைக்காலமே மிக மிகக் கொடுமை.