பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

தொடங்கிவிட்டது. வென்று கையைப் பற்றிய சோணாட்டு மண்ணைக் கைவிட்டுப் புறமுதுகு காட்டி விரைந்தோடத் தொடங்கிவிட்டது சேரர்படை, சேர நாட்டுப் படையின் இறுதிவரிசை, சோணாட்டு மண்ணைவிட்டு ஓடும்வரை, அப்படையைத் துரத்திச் செல்வதைத் திருக்கண்ணன் விட்டானல்லன். சேரர் படை அறவே அழிந்துவிட்டது. அப்படையைச் சேர்ந்த மலைபோலும் உருவினவாகிய யானைகள்,களத்தில் மாண்டு மடிந்தன. பேரரசு பெறலாம் என்ற பேராசையால் படையொடு வந்த மாந்தரஞ்சேரல், தன் படை இழந்து தோற்றுத் தன் நாடு போய்ச் சேர்ந்தான்.

சோணாட்டுத் தலைநகரில் வெற்றிவிழாக் கொண்டாடினார்கள் மக்கள். விழாவில் கலந்துகொண்ட பெரியார்களுள் சிலர், பேரரசன் ஒருவனை இளமைப் பருவத்திலேயே வெற்றிகொண்ட இராசசூயம் வேட்டோன் செயலைப் பாராட்டினார்கள். ஆனால் அவனோ, விழாவிற்கு வந்திருந்தோர் முன்னிலையில் திருக்கண்ணனைக் கொண்டு நிறுத்தி, "நாட்டு மக்களே! இப்போரில் வெற்றி கண்டவன். நான் அல்லேன். இதோ நிற்கும் என் ஆருயிர் நண்பன் திருக்கண்ணனே. ஆகவே, இவ்விழாவில் எனக்குச் செய்யும் ஒவ்வொரு சிறப்பிற் கும் இவனே உரியனாவன்" என்று கூறிப் பாராட்டினான்.


சோணாட்டுத் தலைநகரில், பெற்ற வேந்தன் அளித்த பாராட்டைக் காட்டிலும் சிறந்த பாராட்டைச் சேரநாட்டில், தோற்ற வேந்தன் வாயால் பெறும் பேறு பெற்றான் திருக்கண்ணன். தோற்றுவந்த யானைக்கண் சேய்மாந்தரஞ்சேரல் இரும் பொறை, தனிமையில் கிடந்து தன் தோல்வி குறித்து வருந்திக்கொண்டிருந்தான். "நான் இன்று தோற்றது, உண்மையில், படைவலி இன்மையாலோ, போர்