பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

யோடு அக்காரித் திருமகன் வந்து களம்புகவே, சோர்ந்து போன சோழர் படைக்கும் ஊக் கமும் உரமும் மிகுந்துவிட்டன. முன்னேறிச் சென்று கொண்டிருந்த நம் படையை அவன் மட்டும் தடுத்து நிறுத்தி முறியடிக்காதிருந்தால் நமதே அல்லவோ வெற்றி? உண்மையில் நம்மை வெற்றி கொண்டவன், நீங்கள் நினைப்பது போல் அவ்விளையோனாகிய சோழன் அல்லன். முதுபெரும் வீரனும், முள்ளூர்மலைக் காவலனுமாகிய அக்கண்ணனே ஆவன். நம் வெற்றியை, அவன் அல்லவோ இடைபுகுந்து கெடுத்து விட்டான்!" என்று விடையளிக்கும் முகத்தான் திருக் கண்ணனின் பேராண்மைப் பெருமைதான் என்னே!

"குன்றத் தன்ன களிறு பெயரக்
கடந்து அட்டு வென்றோனும் நிற்கூறும்மே!
வெலீஇயோன் இவன்' என!
கழல் அணிப் பொலிந்த சேவடி நிலம் கவர்பு
விரைந்து வந்து சமம் தாங்கிய
வல்வேல் மலையன் அல்லனாயின்,
நல்லமர் கடத்தல் எளிதுமண் நமக்கு' எனத்
தோற்றான் தானும் நிற்கூறும்மே.
தொலைஇயோன் இவன்' என
ஒருநீ ஆயினைபெரும! பெருமழைக்கு
இருக்கை சான்ற உயர்மலைத்
திருத்தகு சோய் நிற் பெற்றிசினோர்க்கே.