பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

நீர்நிலை பல தோண்டிய பெருமைமிக்க குடியில் வந்த வராவர் என்பது புலனாதல் அறிக.

கிள்ளி என்ற அச்சிறப்புப் பெயரை விரும்பி மேற் கொண்ட பலருள் திருக்கிள்ளியும் ஒருவன். ஆளும் உரிமை பெற்ற அரசர் குடியில் பிறந்தானேனும் திருக் கிள்ளிக்கு அவ்வாய்ப்புக் கிடைத்திலது. ஒரு குடியில் பிறந்த அனைவர்க்கும் நாடாளும் உரிமை உண்டாகி விடுவதில்லை. மூத்தோன் அரியணையில் அமர்ந்து ஆட்சி புரிய, அவனுக்கு இளையராய்ப் பிறந்தவர்கள், அமைச்சர்களாகவும் படைத் தலைவர்களாகவும் பணி புரிந்து, ஆட்சிக்கு அரண்செய்வது அக்கால வழக்க மாகும். அம்முறையில் சோழர் பெரும் படைக்குத் தலைமை தாங்கும் சிறந்த பணிபுரிந்தவன் நம் திருக்கிள்ளி.

திருக்கிள்ளி, போர்ப் பயிற்சிகளை முறையாகத் தேர்ந்து அம்முறைகளை அறம்பிறழா நெறியில் செயலாற்றும் திறம் உடையனாவன். போரில் பெறும் புண் புண் அன்று; புகழின்கண்; அப்புண் பெறாது கழியும் நாள், வீரர்க்கு வீணாள்' என்ற விழுமிய கருத்துடை யான். அதனால் பகைவர் தொடுத்துவிட்டனர் என்ற செய்தியைக் கேட்டதும் பூரிக்கும் அவன் தோள்கள். தன்கீழ்ப் பணிபுரியும் வீரர் பலர் இருக்கவும், அவர் களுள் எவரையும் அனுப்பாது,பகைவர் படைவரிசை முன்னே, அவன் ஒருவனே முதற்கண் புகுந்து அருஞ் சமர் புரிவன். பகைவர் படையைச் சேர்ந்த வாள். வீரர் பலரோடு தான் ஒருவனாகவே நின் று போரிட்டு வெல்வான். அதனால், பகைவீரரின் வாள்கள் அவன் உடலெங்கும் பாய்ந்து பாய்ந்து எண்ணிலாப் புண் களைப் பண்ணியிருக்கும். ஒரு போரில் பெற்ற புண் கள் ஆறிமறைவதற்கு முன்பே மற்றொரு போரில் கலந்துகொண்டு புண்பெற்று விடுவான். அதனால் அவன் உடலெங்கும் வாள்பட்டு உண்டான வடுக்களே