பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

புலவர் இருவரும் குட்டுவர் குடிப் பிறப்புடையவராவர்.நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்ற தெள்ளு தமிழ்க் காப்பியத்தை அருளிய இளங்கோ அடிகளார் பிறந்த பெருமையுடையதும் அக்குடியே.

இத்துணைப் பெருமைவாய்ந்த அக்குட்டுவர் குடியில் அறிவு ஆண்மை, உரு,திரு,கல்வி கேள்விகளாகிய இவை அனைத்திலும் சிறந்த ஓர் ஆண்மகன் விளங் கினான். அவன்பால் பார்த்தவர் அனைவரும் பாராட்டத் தக்க பண்புகள் பலவும் பொருந்தியிருந்தாமையாலும்,அவனால் அவன் பிறந்த குட்டுவர்குடி பெருமையுற்றமை யாலும், அவனைத் திருக்குட்டுவன் எனப் பெயரிட்டு அழைத்தார்கள் அக்கால மக்கள்

திருக்குட்டுவன் தந்தை சேரநாட்டுப் பேரரசர் வரிசையில் வைத்துப்பாராட்டத்தக்க பெருமை யுடையவனாவான். குட்டுவர் குலத்தில் வந்த சேர அரசர்களின் தலைநகராய் விளங்கிய வஞ்சிமா நகரில் இருந்து ஆண்டோருள் அவனும் ஒருவன். அவன் போர் முரசு, ஓயாது, ஒலித்துக்கொண்டேயிருக்கும். புலவர்களும் அவன் வெற்றிப் புகழைப் பாராட்டிப் பரணிபாடி மகிழ்வர். வெற்றிமேல் வெற்றி பெறுவதற்குத் துணைபுரியவல்ல பெரிய தேர்ப்படையும் அவன்பால் இருந்தது. ஆனால் அத்துணைப் பேரரசு செலுத்திய அவன் பெருவாழ்வு முடிந்துவிட்டது. அவன் இயற்பெயரும் புலப் படாதபடி அவன் நிலை ஏனோ தாழ்ந்துவிட்டது. அதனால் திருக்குட்டுவன், பிறந்த நாட்டில் இருந்து வாழ்வதற்கும் வாய்ப்பு இல்லாது போயிற்று. சோண்டு சென்று வாழவேண்டி யதாயிற்று அவன்நிலை.

திருக்குட்டுவன் வருகையை, அப்போது. சோணாட்டு அரியணையில் அமர்ந்திருந்தோன் அறிந் தான். உடனே அவனை அரசவைக்கு அழைத்துக்