பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 குட்டுவன் கொடுத்த இரு களிறுகளாலும் தன் வறுமை வாழ்வு அறவே மறைக்துவிடும். அதல்ை பொருள் வேண்டி, மீண்டும் ஒருமுறை வங்து குட்டு வளே அணுகி இரங்து கிற்கவேண்டிய ஒருகிலே இல்லா மல் போய்விட்டது என உணர்ந்த புலவர் உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளிற்று. உடனே அவர் வாயி லிருந்து வெளிப்பட்டது ஒரு பாட்டு. மகிழ்ச்சியால் துள்ளும் அவ்வுள்ளத்தில் புலமையுணர்வும் பெருக் கெடுத்தோடிற்று. ஆதலின், அப்பாட்டு பழிப்பது. போல் பாராட்டும் பெருமை வாய்ந்த புகழாப் புகழ்ச்சி எனும் அணிகலம் அமையப் பெற்ற அழகுடைய தாயிற்று. - “சிறந்த பாக்கள் புனேயும் உயர்ந்த புலவர்காள்! ஒரு 5ாள் திருக்குட்டுவன் பால் சென்று பாடிப் பரிசில் வேண்டி கின்றேன். அதுகேட்டு அவன் அளிக்கும் பரிசில் பொருளேப் பெறும் ஆர்வத்தோடு |கின்றிருந்த என்பால் அவன் ஒரு கொலே யானையைப் போக்கினன். அது கண்டு அஞ்சி, கான், அகன்று அப்பாற் செல்ல, அவன் அதைக் காட்டிலும் பெரிய மற்ருெரு யானையைக் கட்டவிழ்த்து என் பால் ஏவினன். அவன் அத்தகைய கொடியோளுதல் அறிந்தமையால் என் பெரிய சுற்றம் வறுமையால் வாடினும், அவனே அணுகுதல் அறவே கூடாது என்பதை அறிந்துகொண்டேன். ஆகவே புல்வர்காள்! திருக்குட்டுவன் ஒரு பெரிய கொடையாளி என்று உலகம் எல்லாம் ஒன்று கூடி ஒரே குரலால் கூறின. ஆம், அவன்பால் செல்லாதீர்கள். அது மட்டுமன்று; அவன்பால் பரிசில் பெறலாம் என நெஞ்சால் கினைப் பதும் செய்யாதீர்கள்!” - இது அவர் பாடிய பாட்டின் பொருள். என்னே குட்டுவன் கொடை வளம்! • ' - - -