பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 காலத்திலும், அம்மலை, ரேற்றுப் போவதில்லை. அக் காலத்திலும், மகளிரின் கண்கள் போன்ற கருங்குவளே மலர்கள் இடையிடையே மலர்ந்து காட்சிதர, கரை களில் நிற்கும் கரியநிற அடியினைக் கொண்ட வேங்கை மரங்களின் பொன்னிறப் பூக்கள் உதிர்ந்து பொலிவு செய்ய, மெல்ல உருண்டோடி, நீலமணியின் நிறம் போலும் தெளிந்த நீரால் நிறைந்திருக்கும் கடலோடு கலக்கும் சிற்ருறுகளின் காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும். நாடு, இவ்வாறு நீர்வளம் வாய்ந்திருங் தமையால், அங்காட்டு நிலங்களும் நல்ல வளம் உடையவாய் விளங்கின. நிலங்களில் இட்ட நெல் விதைகள், நீரின்மையால் சாவி ஆகிப் பயன் இழப்பது இல்லே. நிலங்கள் வெப்பத்தால் கொதிப்பேறி, இட்ட பயிர்களே இளமையிலேயே எரித்து விடுவதும் இல்லை. நெல் விளங்திருக்கும் கிலங்கள், கரும்பு விளைங் திருக்கும் கழனிகளோ எனக் கண்டு மருளுமளவு ஓங்கி வளர்ந்திருக்கும். அத்தகைய வளங்கொழிக்கும் வனப் புடையது அங்காஞ்சில் நாடு. கெல்வளம் கொழிக்கும் அங்க்ாஞ்சில் நாட்டைப், பலா முதலாம் பழவளம் மிக்க காஞ்சில் மலேயை அரசிருக்கையாகக் கொண்டு ஆண்டிருந்தான் ஆற்றல் மிக்க ஒரு வீரன், நாட்டு மக்கள்ால் காஞ்சிற் பொருகன் என அழைக்கப்பெறும் அவன், வள்ளுவக் குடியில் வங்தவனவன். அரசர்களின் மணநாள், பிறந்தநாள் போலும் மங்கல விழாக்களுக்கான காலங்களே அறிந்து கூறுவதும், அம்மங்கல நிகழ்ச்சிகளே காட்டவர்க்கு முரசறைந்து அறிவிப்பதும் ஆகிய உரிமையும், அரசவையில் அரசரோடு ஒப்ப அமரும் ஐம்பெருங் குழுவில் இடம்பெறும் பெருமையும் வாய்ந்த வள்ளுவக் குடியில் வந்தவதைலின், அவனே காஞ்சில் வளளுவன் என அழைக்கும் வழக்கமும் இருந்தது. காஞ்சில் மலைக்கு வடகிழக்கில் வள்ளியூர் என்ற் பெய வருடையதொரு சிற்றுார் உளது. அவ்வூரில், இடு