பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96) யான். ஓயாது ஒலிக்கும் போர் முரசும், உயர்ந்த இனத்தைச் சேர்ந்த யானைகளும், கடல் நீரையே எல்லேகளாகக் கொண்ட பரந்த நாடும், வெல்லற்கரிய வீரமும் மூவேந்தர்கள்பால் ஒருங்கே பொருந்தியிருப் பினும், அவர்கள் இவனுக்கு நிகராகார். ஆண்மை யாலும் அருளாலும், இவன் அவர்களைக் காட்டிலும் கணிமிகச் சிறந்து விளங்கினன். அதனால், அம்மூவேங் தரைப் பாடிப் பாராட்ட விரும்பாத புலவர்களும், இவனைப் பாடிப் பாராட்டுவதில் பேரார்வம் காட்டி ர்ைகள்; பெருமை கொண்டார்கள். ஒரு சிறைப் பெரியனர் என்ற புலவர், இவனைப் பார்த்து, 'காஞ்சிற் பொருக! புலவர்கள் பாராட்டத் தக்க பெருவாழ்வும், பேரும் புகழும் படைத்தவர், இங்காடாளும் பேரரசர் மூவரும். புலவர் அனைவரும், அவர்களைப் பாராட்டி விட்டார்கள். அத்தகைய பெருமைவாய்ந்த அவர்களைப் பாடாதவன் கான் ஒருவனே. அவர்களைப் பாடவேண்டும் என்ற வேட்கை என் உள்ளத்தில் இன்றுவரை எழவில்லை. ஆல்ை, அவர்களைப் பாடவிரும்பாத என் உள்ளம் உன்னைப் பாடிப் பாராட்டத் துடிக்கிறது. என்னல் பாராட்டப் பெற்ற முதல் மன்னன் நீயே. இவ்வாறு பேரரசர்களையும் பாராட்ட விரும்பாத என்னல், பாராட்டத்தக்க பெருமை உன்பால் பொருங்தியுளது. அப்பெருமையுடைய நீ பல்லாண்டு வாழ்ந்து பிறரை யும் அப்பெருமையுடையோராக்கு வாயாக! ே வாழ்வ தோடு, பெறுதற்கரிய பிள்ளையாய் உன்னைப் பேணி வளர்த்துவிட்ட உன் பெற்ருேர்களும் பல்லாண்டு வாழ்வார்களாக!' என்று பாராட்டி வழங்கிய வாழ்த்துப்பா மடல், இவ்வள்ளுவனின் வளமார் புகழை கிலேகாட்டுவதறிக. - - - -