பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. நாலை கிழவன் நாகன் அரசர்க்கு உடன் இருந்து உ றது.ணபுரியும் ஐம்பெருங் குழு, எண்பேராயம் என்ற அரசியல் அமைப்புகளில் இடம் பெறுவாருள் தலைசிறந்தவர் அமைச்சரும் படைத் தலைவருமாவர். 'மங்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்; 'தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை’ என அவ்விருவர்க்கும் உரிய பணிகளே வேறுபிரித்து வகைசெய்து கூறுகிறது அறநூல், அரசன் ஆற்ற வேண்டிய அருஞ் செயல், அதைச் செய்து முடிக்க வேண்டிய துணைக்கருவி, அதைச் செய்தற்கு ஏற்றகாலம், அதைச் செய்யவேண் டியமுறை ஆகியவற்றை முன் அ அறிந்து கூறலும், அவற்றை அவ்வகையால் முன்னின்று முடித்தலும் அமைச்சர்களின் தலையாய கடமையாம். "கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினேயும் மாண்டது அமைச்சு தெரிதலும் தேர்ந்து செயலும், ஒரு தலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு' என வள்ளுவர் வகுக்கும் அமைச்சர்க்குரிய விதிமுறைகளை யும் காண்க. . - - . பேராண்மையும், மானம்.நிறைந்த பேருள்ள்மும், மாண்புமிக்க குடிப்பிறப்பும், கம்பி ஏற்றுக் கொள்ளத் தக்க நற்பண்பும் ஆகிய இக்கான்கும், படைத்தலேவன் ஒருவன அழியாது காக்கும் நான்கு அரண்களாகும். கூற்றுவனே கோபம் கொண்டு படையெடுத்து வனும் அஞ்சாது எதிர்க்கவல்ல ஆற்றல் உடைப் வனே உண்மை வீரனவன். வீரனுக்கு வெற்றிப்