பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
viii

பொருள் ஆய்வு, மற்றும் மொழி இயல் துறைகளில் தமக்குள்ள ஆழ்ந்த பெரும்புலமையை ஒன்று திரட்டிக்கொண்டு வந்துள்ளார். திராவிடர் வெளிநாட்டவராவர் என்ற கொள்கை பற்றியும், ஆய்வும், புத்தாய்வும் செய்துள்ளார். அவ்வாறு செய்யும் நிலையில் திருவாளர்கள் பி.டி. சீனிவாச அய்யங்கார், மற்றும் எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை போலும் சிறந்த அறிஞர்களோடு கைகோத்தும் சென்றுள்ளார்.

“திராவிடம்”, தொல்பழந்தமிழரின் தாயகம்: ஐரோப்பிய-ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையில் உள்ளதான நடுநிலக்கடல் பகுதி மக்கள் எனப்படுபவர். சிந்து கங்கை நிலப்பகுதி முழுமையாக உருவாகாத காலத்திலேயே, தென்னிந்தியாவையும், ஆப்பிரிக்காவையும் இணைத்திருந்து, கடலுள் ஆழ்ந்து போன ஒரு பெருநிலப்பரப்பின் ஒரு பிரிவாக இருந்ததும், திராவிடர்களின் தாயகமானதுமான, இந்திய தீபகற்பத்தையே தாயகமாகக் கொண்டிருந்தனர் என வாதிட்டு நிலை நாட்டுகிறார். உண்மையில், இது ஒரு துணிவான முடிவுதான். தென் ஆப்பிரிக்கா, தென்இந்தியா, தென்அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அனைத்தும் லெமூரியா என்ற பெயருடைய பெரிய நிலப்பரப்பின் பகுதிகளாம்; உலகின் நனிமிகப் பழமை வாய்ந்தன; நிலஇயல் விளைவாக, வேறு வேறாக ஒதுக்கப்பட்டன என்ற கருத்தைச் சில நிலநூல் ஆய்வாளர் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால், மண்ணில் மனித இனம் இருந்தமைக்கான அறிகுறி எதுவும் காணக் கூடாத ஐம்பது நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, அத்தகைய நிலமாற்றம் நிகழ்ந்தது என உறுதிப்படுத்துகின்றனர். மாய்ந்து போன தமிழர்களின் பழைய எலும்புக்கூடுகளைக் காட்டிலும், நனிமிகப் பழமை வாய்ந்த மனித எலும்புக்கூடுகள், கிழங்(க்)கு ஆப்பிரிக்காவிலும், பெர்டிலெ க்ரெசென்ட், (Fertile Crescent)